நியாயப்பிரமாணம் அல்லது கிருபை LAW OR GRACE 54-10-06 ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா மாலை வணக்கம், நண்பர்களே. நல்லது, இன்றிரவு மறுபடியும் வெளியில் இருப்பதற்காக (out-வியாதியஸ்தர்களுக்கு சென்று ஜெபிப்பது, வெளிநாடுகளில் இருந்து கடிதங்கள் மற்றும் தொலைபேசி மூலமாக வருகின்ற ஊழிய அழைப்புகள் போன்றவைகளை விட்டு விலகி கூடாரத்தில் இருப்பதை தீர்க்கதரிசி இங்கு குறிப்பிடுகிறார்-தமிழாக்கியோன்) நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மேலும் நான்... நான் தாமதமானதற்கு காரணம் நான்... ஆம், சகோ.நெவில் கூறியதைப்போல நான் - நான் தாமதமாகத்தான் வந்தேன். ஆனால் அதற்கு காரணம் என்னவென்றால், நான்.... அழைப்புகள் மற்ற காரியங்களிலிருந்து சற்று விலகி இருக்க முயற்சி செய்யப்போகிறேன் என்று முன்பொரு நாள் சபையில் நான் கூறியது உங்களுக்குத் தெரியும். அப்படி செய்ய முடியவில்லை. நான் சற்று முன்பு தான் மருத்துவமனையை விட்டு, லூயிவில்லிலுள்ள இரண்டு மருத்துவமனைகளின் அவசர பிரிவில் இருந்து சில நிமிடங்களுக்கு முன்பு தான் வெளியே வந்தேன். நான் சற்று தாமதமாக வந்ததற்கு அது தான் காரணம். நான் இங்கே சரியான நேரத்திற்கு வந்திருக்க வேண்டும். எனவே... அதன் பிறகு நான்.... என் மனைவி என்று நம்புகிறேன், என்னை அழைத்து வியாதியாய் இருக்கிற சகோதரி ரடலும் கூட (Sis.Ruddel) இன்றிரவு இங்கு இருக்கப் போகிறார்கள் என்று அதைப் பற்றி கூறினாள். அப்படி கேள்விபடுவதை நான் வெறுக்கிறேன். 2. மேலும் நான் எனது மைத்துனனை லூயிவில்லில் விட்டு வந்தேன். இப்போது தான் அவரை கிறிஸ்துவினிடத்திற்கு வழி நடத்தினேன். ஒரு நல்ல காரியம். மேலும் மேலும் அது அவருக்கு ஒரு பயங்கரமான வியாதியாக இருந்தது, அது ஹாட்கின்ஸ் வியாதி (hodgkin's--கல்லீரல், மண்ணீரல் நிணநீர் சுரப்பி போன்றவைகளை பாதித்து தீங்கு விளைவிக்கக் கூடிய ஒரு வியாதி-தமிழாக்கியோன்) எப்பொழுது வேண்டுமானாலும் அவர் மரித்து விடுவார். ஒரே இரவில் கர்த்தர் அவரை சுகமாக்கினார் என்று விசுவாசிக்கிறேன். 3. எனவே அதே வியாதியினால் சகோ.ஜிம் வைஸ்ஹார்ட் அவர்களுடைய பேரனும் இராணுவ மருத்துவமனையில் கிடத்தப்பட்டு இருந்தான். மேலும் ஹாட்கின்ஸ் நோயானது இருதயத்தையும் மார்பின் உட்பகுதியையும் உடைத்துக் கொண்டிருந்தது. அப்படியென்றால் அது சிறிதளவே தான் என்று உங்களுக்குத் தெரியும். (அவன் பிழைப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என்று தீர்க்கதரிசி இங்கு குறிப்பிடுகிறார்-தமிழாக்கியோன்). அதைக் குறித்து அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் தேவன் தான் அவர்களுடைய ஒரே நம்பிக்கை என்பதை அறிந்திருக்கிறார்கள். 4. இன்றிரவு நான் உண்மையிலேயே மில்டவுனுக்கு போக வேண்டும். இங்கு வரும் பஸ்டி ரோஜர்சை (Busty Rogers) உங்களுக்கு நினைவிருக்கும். ஆபத்தான நிலையில் இருக்கும் சகோ.பஸ்டி ரோஜர்சை உங்கள் அனைவருக்கும் தெரியும். நாள் முழுவதும் என்னை அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். 5. இங்கே கீழே இருக்கிற சிறிய ஜார்ஜி கார்டர், ஒன்பது வருடம் எட்டு மாதங்களாக படுக்கையிலிருந்து ஒருமுறை கூட எழுந்திருக்க முடியாதபடி அப்படுக்கையிலேயே படுத்துக்கிடந்து சுமார் 12 அல்லது 14 வருடங்களுக்கு முன்பு சுகமடைந்தாள். ஒரு சமயம்.... இரண்டு முறை அவளுக்காக நான் ஜெபித்தேன். ஒரு நாள் இரவு ஜெபிக்க சென்ற இடத்தில் கர்த்தர் இறங்கி வந்தார், ஒரு புதர் செடியின் மூலமாக ஒரு சிறிய வெளிச்சம் பிரகாசித்து, "கார்டருடைய வழியிலேயே ஜார்ஜியினுடைய சுகத்துக்காக போ. அவள் சுகமாக இருக்கப் போகிறாள்" என்று கூறினார். இந்த சம்பவம் உங்கள் அனைவருக்கும் தெரியும். இல்லையா? (சபையோர், "ஆமென்" என்று கூறுகிறா ர்கள் - ஆசிரியர்) அன்று முதல் இந்த வருடங்களில் அவள் ஒருமுறை கூட ஒரு மோசமான சளி பிடித்ததற்காககூட படுத்தது இல்லை என்று நான் ஊகிக்கிறேன். 6. இப்பொழுது அவள் மார்பக புற்று நோயினால் மரித்துக் கொண்டிருக்கிறாள் என்பதையும் என்னை அழைத்துக் கொண்டிருப்பதையும் நான் திரும்ப வந்ததை அவள் கேள்விபட்டிருக்கிறாள் என்பதையும் நாம் பார்க்கிறோம். அவள் சுகமடையவே முடியாது என்று அவர்கள் கூறினார்கள். அவள் தன்னுடைய படுக்கையிலிருந்து எழுந்து தன்னுடைய சுகத்தை ஏற்றுக் கொண்டாள். அதே விதமாக அவளைப் பார்க்க முடிந்தது. நாளை இங்கு என்னுடைய கடைசி நாள். நான் போக வேண்டும், ஆகவே இவ்விதமாக அழைப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. எனவே என்ன செய்வதென்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் உங்களால் இயன்ற சிறந்ததை செய்யுங்கள். 7. ஆனால் முக்கியமான காரியம், செய்வதற்கு முக்கியமான காரியம் என்று சகோதரன் கூறினபடி நீங்கள் இயேசுகிறிஸ்துவின் உடனான ஐக்கியத்திற்காக எல்லாவற்றையும் விட்டு விட வேண்டும்: ஒவ்வொன்றையும். எல்லாவற்-றிற்கும் பிறகு நாம் ஒருவரையொருவர் கவனித்துக் கொண்டிருக்கிறோம். பின்பு நாம் கிறிஸ்துவினிடமிருந்து தூரப்போய் விடுகிறோம், நீங்கள் பாருங்கள்? அவருடனான ஐக்கியத்திற்காகவே நான் அதிக அதிகமான நேரத்தை செலவிடுவேன். அப்படி செய்வதால் நீங்கள் மற்றவர்களுக்கு உதவிட முடியும். அது சரிதானே? (சபையோர், "ஆமென்" என்று கூறுகின்றனர் -ஆசிரியர்.) 8. எனவே இன்றிரவு இச்சிறு ஜெபக் கூட்டத்திற்காக நாம் கூடி இருப்பது நல்லது, அதாவது புதன் அன்று இரவில் நாம் கூடி வருவது. இன்றிரவுக்கான போதனையை குறித்து அவருக்கு கூற நான் மறந்து விட்டேன். எனவே நான் இன்றிரவு இங்கு வந்து திறந்து கொடுக்க வேண்டும். எனவே, சாலையில் போய்க் கொண்டிருக்கும் போது, எனது காரினுள் உள்ள வெளிச்சத்தில் இன்று இரவுக்காக, சமீபத்தில் எபிரேயர் புத்தகத்திலிருந்து ஞாயிறு பள்ளியில் நான் போதித்த சிலவற்றை எடுத்தேன். 9. கடந்த முறை, நான் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன்பு, எபிரேயர் 10-அதிகாரத்தை இங்கு ஞாயிறு பள்ளியில் போதித்துக் கொண்டிருந்தேன் என்று நம்புகிறேன். கீழே வாசித்துக் கொண்டிருக்கையில் நான் நினைக்கிறேன், இங்கே 18-வசனம், "அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்காக" என்று குறித்து வைக்கப் பட்டிருக்கிறது, அந்த அடுத்த ஞாயிறு இன்னும் வரவே இல்லை. ஆகையால் இன்றிரவு நமது மாலை பாடத்திற்காக நாம் அங்கிருந்து (எபிரேயர் 10:18-லிருந்து) ஆரம்பிக்கலாம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இவைகள் எல்லாவற்றையும் ஜெபத்தில் நினைவு கூருங்கள். 10. இங்குள்ள காவல்படை மருத்துவமனையில் அவசர பிரிவில் படங்களையு ம் மற்றவைகளையும் அச்சு எடுப்பவரும் என்னுடைய பழைய நண்பரும் நல்ல நண்பருமாகிய பில்-கிராண்ட் (Bill-Grant) என்ற பெண் அம்மருத்துவ மனைக்கு வெளியிலோ அல்லது கீழே இருக்கிற மருத்துவமனையிலோ அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்று சற்று முன் நான் உள்ளே வருகையில் ஒரு பெண் என்னிடம் கூறினாள். 11. பின்னால் இருக்கிற சகோ.ஸ்லாஃக்டர் என்பவருடைய சகோதரரை நான் சந்தித்தேன். அவர் இரண்டு முறை மருத்துவ மனையில் இருந்ததாக ஜீன் (Gene) என்னிடம் கூறினான் என்று நம்புகிறேன். எல்லா இடங்களிலும் வியாதியாய் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். அதற்கு முடிவே இல்லை, நிச்சயமாக. ஆனால் அவன் கூறினான்... 12. உங்களுக்கு தெரியும், நான் அடிக்கடி ஆச்சரியப்படுவதுண்டு, மோசே இஸ்ரவேல் ஜனங்களை வனாந்திரத்தின் வழியாக வழி நடத்திக்கொண்டு வந்த போது, அவன் அவர்களை வெளியே கொண்டு வந்த போது இங்கும் அங்குமாக 20-லட்சம் ஜனங்கள் இருந்தார்கள். வாலிபர் மற்றும் வயோதிபர் எல்லாரையும் சேர்த்து. அவன் அவர்களை 40-வருடங்களாக வழி நடத்திக் கொண்டு வந்தான். இன்று நமக்கு இருப்பது போல சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு முறைகள் அவர்களுக்கு இருந்ததில்லை என்பதை எப்படி என்று இப்பொழுது சற்று சிந்தித்துப்பாருங்கள். அவர்களுக்கு இருந்ததுகூட இல்லை... அவர்களுக்கு வாலிபர்கள் இருந்தனர், பெருமளவில் வாலிபர்களும் அங்கே இருந்தனர். 20-லட்சம் ஜனங்களில் ஒரு இரவில் எத்தனை குழந்தைகள் பிறந்து இருக்கும் என்று நீங்கள் சிந்தித்துப்பாருங்கள்? பிறகு அதுவுமல்லாமல் வயதான எல்லா ஜனங்களும், ஊனமுற்றோரும் மற்றவைகளும் இருந்தனர். 40-வருடமாக அவர்களை அவன் தேவனுடைய தலைமையின் கீழ் வழி நடத்தினான். அவர்கள் வெளியே வந்து 40-வருடங்களாக வனாந்திரத்தில் இருந்த போது அவர்களில் பெலவீனன் ஒருவனும் இருந்ததில்லை. 13. இன்றிரவு அவர்களை (இஸ்ரவேலரை) சுகத்துடன் வைப்பதற்கு மருத்துவர் மோசேயினுடைய மருந்து வைக்கும் தோள் பட்டை பையை பார்க்கவும், அதனுள் அவன் என்ன வைத்துள்ளான் என்பதை பார்க்கவும் நீங்கள் விரும்புகிறதில்லையா? அதைப் பார்க்க நீங்கள் அனைவரும் விரும்பு-கிறீர்களா? (சபையோர், "ஆமென்" என்று கூறுகின்றனர் - ஆசிரியர்). என்னால் அதை உங்களுக்கு காண்பிக்க முடியும். இப்பொழுது நாம் அனைவரும் பின்பாக யாத்திராகமத்திற்கு சென்று, அது எங்குள்ளது என்று நான் உங்களுக்குக் காண்பிப்பேன். இது தான் அவனுடைய மருந்து பெட்டி (medicine chest). பின்பாக அவன் என்ன கூறியிருக்கிறான் என்பதை நான் உங்களுக்குக் காண்பிக்கிறேன். நான் இப்பொழுது அவனுடைய மருந்து பைக்குள் (medicine sack) பார்த்து, அது என்ன சொல்லுகிறது என்று நான் பார்க்கிறேன்.. 14. அங்கே ஒரு குழந்தை பிறந்த போதோ, யாரோ ஒருவருக்கு குடல்வால் நோயோ, அல்லது காசநோயினால் பாதிப்படைந்தோ அல்லது இவ்விதமாக ஏதோவொன்று இருந்திருக்குமானால், "நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்" என்ற மருந்தை பயன்படுத்தும் விதிமுறையை (prescription) மோசே வாசித்தான். "நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்" என்ற ஒன்று மாத்திரமே அவனுக்கு இருந்தது. இப்பொழுது, அந்த ஒரு காரியம் மாத்திரமே அவனுக்கு இருந்தது. ஊ-ஹீ. அது போதுமான நல்லதாக இருக்கிறது இல்லையா? (சபையோர், "ஆமென்" என்று கூறுகின்றனர்-ஆசிரியர்). "இப்பொழுது கர்த்தர் ஒருவரே உன்னை சுகமாக்குபவர்" என்று மோசே கூறினான். இவ்விதமாக அவர்கள் அவனுக்காக ஜெபித்தனர் அவன் சுகமடைந்தான். 15. வனாந்தரத்தில் வேறொரு சம்பவம் நிகழ்ந்தது உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் வெளியே வந்த போது அவர்களுக்கு புதிய பாதரட்சைகள் தேவை இல்லாதிருந்தது. அவர்களுடைய வஸ்திரங்கள் பழமையாய் போகவில்லை. 40-வருட வனாந்தரத்தில், "உன் சகல நோய்களையும் சுகமாக்குகிற கர்த்தர் நானே" என்ற ஒரேயொரு மருத்துவமும், ஒரே மருந்தை பயன்படுத்தும் விதி முறையும் இருந்தது. அவர்கள் அவரை வார்த்தையில் ஏற்றுக்கொண்டபடி யால் அவர் அதை செய்து அவர்களை சகலவற்றிலிருந்தும் விடுவித்தார்.... 16. இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், அவர்கள் கற்றறிந்திருந்தனர். கூர்ந்த அறிவுடையவர்களாக இருந்த எகிப்தியர்களுடன் அவர்கள் இருந்து உள்ளனர். கூர்ந்த அறிவுடையவர்களாக இருந்துள்ள அவர்களைப் போன்ற மருத்துவர்கள் இன்று நமக்கு இல்லை. காரணம் என்னவென்றால் அவர்கள் செய்து வைத்துள்ள காரியங்கள் அவர்களுக்கு இருந்தது, விஞ்ஞானத்தில் அவ்விடத்தை நாம் இன்னும் எட்டவில்லை என்பதை அது நமக்கு காண்பிக்கிறது. உதாரணத்திற்கு அந்த எகிப்தியர்கள் கட்டியுள்ள... சில நாட்களுக்கு முன்பு நான் அங்கே அந்த ஸ்பின்க்ஸ் (எகிப்தில் பெண் தலையும் சிங்க உடலும் கொண்ட சிலை- தமிழாக்கியோன்.) வழியாக சென்ற போது பார்ப்பதற்கு அது எவ்வளவு பெரிதாக இருந்தது. 17. அந்த கூர்நுனி கோபுரங்கள், அங்கே மேலே பல டன்கள் எடை கொண்டவை, நகரில் உள்ள உயரமான கட்டிடத்திற்கு மேல் வானளாவி உயரமாக இருந்தது. அங்கே மேலே இருக்கிற பெரிய கற்கள் ஏறக்குறைய இக்கூடாரத்தைப் போல பெரியவைகளாக இருந்தது. அவைகளை இன்றைக்கு மேலே வைப்பார்களானால் அவர்களால் முடியாது. அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் அதை செய்துள்ளனர். 18. அந்த ஸ்பின்க்ஸ் தனது காலை வைப்பதற்கு மேல் பகுதி தட்டையான 16-வாகனங்கள் தேவை என நான் நினைக்கிறேன். அதனுடைய சரீரத்தை குறித்து என்ன? அங்கே ஆகாயத்தில் வழி அமைத்ததைப் போல. அவர்கள் எப்படி அதை மேலெடுத்து சென்றார்கள்? பாருங்கள், அவர்கள்-அவர்கள் இன்று நம்மிடம் இல்லாத அறிவுக்கூர்மையும், இரகசியங்களையும் உடையவர்களாக அவர்கள் இருந்துள்ளனர். நம்மிடம் அது உண்டு என நினைக்கிறேன், ஆனால் நாம் அதன் அளவுக்கு முன்னேறவில்லை. அணுசக்தியோ அல்லது அதைப் போல ஏதோ ஓன்று; ஏனென்றால் மின்சார சக்தியோ அல்லது அதைப்போன்ற சக்திகளோ அதை தூக்க இயலாது. ஆனாலும் பிறகு அதை அவர்கள் கட்டி உள்ளனர். 19. மேலும் அந்த கூர்நுனி கோபுரம், அந்தப் பெரிய கூர்நுனிக் கோபுரமானது பூகோள அடிப்படையில் மிகச்சரியாக பூமியின் மையத்தில் கட்டப்பட்டுள்ளது. சூரியன் எவ்விடத்தில் இருந்தாலும் அதைச் சுற்றிலும் நிழல் விழுவதே இல்லை. அவர்களோடு ஒப்பிடும் போது, கட்டுமான துறையில் நமக்கு பெருமளவில் நீண்ட சாலைகள் உண்டு, நினைத்துப் பார்த்தால் இப்போது இருப்பதைவிட 5000-ஆண்டுகளுக்கு முன்பே அவர்களுக்கு அது இருந்துள்ளது. 20. எனவே இங்குள்ள இந்த வேதாகமத்தைப் போல அதே வேதாகமத்தை அதனுள் கண்டுபிடித்திருந்தனர். அதில் அளவீடுகளும் (measurements) இன்னும் மற்றவைகளும், இன்றைக்கு நமக்கு இருப்பதைப் போல, சுவிசேஷம் மற்றும் வேதவசனத்திலிருந்தும் கண்டிப்பாக நமக்கு என்ன தேவைகளோ அவைகளும் எழுதப்பட்டிருந்தது. ஏனோக்கு, ஜலப்பிரளயத்திற்கு பலவருடங்களுக்கு முன் அதை அங்கே வைத்தான். 21. அதன்... பிறகு, தேவன் மூன்று வேதாகமங்களை எழுதினார். தேவன் சகலத்தையும் மூன்றில் செய்கிறார். அவர் மூன்று வேதாகமங்களை எழுதினார். அவருக்கு, கிறிஸ்துவின் 3-வருகைகள். அங்கே கிருபையின் மூன்று படிகள் இருக்கிறது. அங்கே தேவத்துவத்தில் மூன்று நபர்கள் இருந்தனர் .... தேவத்துவத்தில் ஒரே நபரின் மூன்று வெளிப்படுதல்களே. அவைகள் எல்லாமே. பாருங்கள்? 22. இப்பொழுது, முதல்முறை இயேசு வந்ததைப் போல, ஒரு விசை அவர் இங்கிருந்துள்ளார். (அவர் இங்கிருக்கவில்லையா?) தனது மணவாட்டியை மீட்பதற்காக அவர் வந்தார். இரண்டாம் விசை தனது மணவாட்டியை ஏற்றுக் கொள்ளவும் பிடித்துக்கொள்ளவும் ஆகாயத்தில் சந்திக்கவும் வருகிறார். மூன்றாம் விசை ராஜாவும் ராணியுமாக தனது மணவாட்டியோடு வருகிறார். 23. பாருங்கள், பின்பு அங்கேயும் கூட மூன்று, தேவனுடைய வெளிப்படுதல்-களிலும் மூன்று. அவர் இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்திய போது பிதாத்துவத்தில் தன்னை ஒருவிசை வெளிப்படுத்தினார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாக குமாரத்துவத்தில் அடுத்த முறை தம்மை வெளிப்படுத்தினார். பரிசுத்தாவியாக இப்போது நம்முடன் இந்த மூன்றாவது முறை வெளிப் படுத்தினார். பாருங்கள், மூன்று வெளிப்படுதல்கள். சகலமும் மூன்றில்... 24. இப்பொழுது நாம் நமது பாடத்திற்கு செல்லலாம். எத்தனை பேர் வேதம் வாசிப்பதை விரும்புகின்றனர்? (சபையோர், "ஆமென்" என்று கூறுகின்றனர்-ஆசிரியர்). ஓ! நான் அதை விரும்புகிறேன். 25. கர்த்தருக்குச் சித்தமானால், நான் திரும்பி வரும்போது நான் போய்... ஓரிரு வாரங்களுக்கு சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளப் போகிறேன். எனவே நான் திரும்பி வரும் போது கர்த்தருக்குச் சித்தமானால், இக்கூடாரத்தில் ஒரு எழுப்புதலை வைக்கப் போகிறேன், அதாவது ஒரு போதக எழுப்புதல். வேதாகமத்தில் எங்கிருந்தாவது நாம் எடுத்துக் கொண்டு நாம் அதை மிக கவனமாகவும் சரியாகவும் பகுத்தறியப் போகிறோம்.... 26. நாம் வழக்கமாக யாத்திராகமம் போன்ற புத்தகத்தை எடுத்துக் கொண்டு அதை விட்டு விலகாமல் மாதக்கணக்கில் யாத்திராகமத்திலேயே இருப்போம் என்பது சபையின் மூத்த அங்கத்தினர்கள் எத்தனை பேருக்கு அது ஞாபகம் உள்ளது? 27. ஒரு சமயம் நான் யோபுவின் புத்தகத்திற்குச் சென்று, வெளிவர விரும்பவேயில்லை, அது உங்களுக்கு நினைவிருக்கிறதா? (சபையோர், "ஆமென்" என்று கூறுகின்றனர் - ஆசிரியர்). "சகோ.பிரான்ஹாமே, நீங்கள் எப்பொழுது யோபுவை சாம்பல் குவியலில் இருந்து எழுப்பப் போகிறீர்கள்?" என்று எனக்கு ஒரு ஸ்திரீ கடிதம் எழுதி கேட்டிருந்தாள். உங்களுக்குத் தெரியும், அந்த ஒரு பாடத்தை தொடர்ந்து கொண்டு வயதான ஏழை யோபுவை சாம்பல் குவியலில் உட்காரவைத்திருந்தேன். எல்லா நண்பர்களும் அவனை கைவிட்ட நிலமையிலும் பருக்கள், இன்னும் மற்றவைகளிலும் அவன் உடைந்து போனவனாக காணப்பட்டான். அந்த வயோதிபனுக்காக நான் மிகவும் வருந்துகிறேன், இன்னும் நான்..... 28. அதன் பின்பு எவ்விதம் கர்த்தர் அவனை மாற்றி அவனை ஆசீர்வதித்தார். ஏனென்றால் தன் அறிவுக்கு எட்டிய வரையிலும், தன் பாவங்களை அறிக்கை செய்து தகன பலியின் கீழ் வாழ்ந்தான். அவன் அறிந்திருந்த வழியெல்லாம் அவ்வளவு தான். அவன்... தன்னுடைய பாவங்களை அறிக்கை செய்ய. அவன் சென்று தன்... தன் பிள்ளைகளை அழைத்து, "அவர்கள் இரகசியமாக பாவம் செய்து அதை அறியாதிருக்கக்கூடும்" என்று சொல்லி பலி செலுத்தினான். அவன் எந்த அளவுக்கு ஒரு உண்மையுள்ள தகப்பனாக இருந்தான். தேவன் முடிவில் அவனுக்கு எல்லா பிள்ளைகளையும் திரும்பவும் கொடுத்தார். அது உங்களுக்குத் தெரியுமா? 29. நான் உங்களிடம் சிலவற்றை இங்கே கேட்கப் போகிறேன். கூறுங்கள். அவர் எவ்விதம் அவனுடைய பிள்ளைகளை அவனுக்குத் திரும்பக்கொடுத்தார் என்று இன்னும் ஞாபகமுள்ளதா? இப்பொழுது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், அவர் அவனுக்கு இரட்டைத்தனையாகக் கொடுத்தார். அனேக ஆயிரம் எருதுகள் அவனுக்கு முன்பு இருந்தது; அவைகள் எல்லாம் எடுக்கப்பட்டு போன போது, அவர் அவனுக்கு இரட்டைத்தனையாகக் எருதுகளையும் (கொடுத்தார்) ஆடுகளையும் இரட்டைத்தனையாகக் (கொடுத்தார்). ஆனால் நினைவில் கொள்ளுங்கள், அவனுக்கு ஏழு அல்லது பன்னிரெண்டு பேர் இருந்தார்கள் என்று நம்புகிறேன். நான் இப்பொழுது மறந்து விட்டேன். ஆனால் இவ்விதமாக குமாரரும் குமாரத்திகளுமாக இருந்துள்ளனர், (ஏழு குமாரரும் மூன்று குமாரத்திகளும் - யோபு 42:13 - தமிழாக்கியோன்). ஆனால் அவனுக்கு அதே எண்ணிக்கையுள்ள குமாரரும் குமாரத்திகளும் அவனுக்கு இருந்தனர். தேவன் அவர்களை அவனுக்கு கொடுத்தார். அது சரியா? பாருங்கள், இப்பூமியில் அவனுடைய ஆஸ்திகள் அனைத்தையும் இரட்டைத்தனையாகக் கொடுத்தார். இப்போது ஆனால் அவனது குமாரரும் குமாரத்திகளும் அனைவரும் கொல்லப்பட்டார்கள். ஆனால் அதே அளவு குமாரரையும் குமாரத்திகளையும் கொடுத்தார். நீங்கள் எப்பொழுதாவது கவனித்தீர்களா? நீங்கள் அதைப் பற்றி நீங்கள் எப்பொழுதா வது சிந்தித்ததுண்டா? அதை நாம் எப்போது கற்றுக் கொண்டோம் என்பதை நினைவில் கொண்டுள்ளீர்களா? பாருங்கள்? 30. அந்த குமாரர்களும் குமாரத்திகளும் எங்கிருந்தனர்? மகிமையில் அவனுக்காக காத்துக் கொண்டிருந்தனர். பாருங்கள், அவர் அவனுக்கு ஒவ்வொன்றையும் கொடுத்தார். பாருங்கள், அவைகளில் ஒன்றும் இழந்து போகவில்லை. பாருங்கள். முதலில் அவர் குறிப்பிட்ட, அதே அளவு குமாரர்- களையும் குமாரத்திகளையும் முடிவிலும் அவர் குறிப்பிட்ட அதே அளவு. ஆனால் ஆடுகள் எருதுகள் இன்னும் மற்றவைகளை இவ்விதமாக அவர் இரட்டிப்பாக்கினார். ஆனால் அவனது குமாரர்களும் குமாரத்திகளும் இரட்சிக்கப்பட்டு, யோபு வருவதற்காக மகிமையில் காத்துக் கொண்டிருந்தனர். ஓ, என்னே! அது எல்லாவற்றிற்கும் தகுதியாயிருக்கிறது, இல்லையா? எல்லாம் சரி. 31. எபிரேயர் புத்தகத்தில், என் அபிப்ராயத்தில் பவுல் நியாயப்பிரமாணத்தை கிருபையிலிருந்து வேறுபிரித்து பேசுகிறான். நாம்... நாம் அனைவரும் இரண்டு வசனங்களை வாசிக்கலாம், முதலாவதாக பத்தாம் அதிகாரத்தில் முதல் வசனத்தை வாசித்து, அதன் பிறகு பத்தொன்பதாவது வசனத்திலிருந்து ஆரம்பிக்கப்போகிறோம். நான் நினைக்கிறேன், நாம்... நாம் பார்க்கலாம். ....இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டு வருகிற ஒரே விதமான பலிகளினாலே அவைகளை செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப் படுத்தமாட்டாது. 32. இப்பொழுது, நேராக இம்முதல் பகுதியை அறிந்து கொள்வோமானால், பழைய நியாயப்பிரமாணமானது வரப்போகிற புதியவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறது என பவுல் கூற முயற்சிக்கிறான் என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது அவைகள்... ஒரு நிழல் என்பது ஏதோ ஒன்றாக இருக்கிறது.... 33. நீங்கள் சுவரை நோக்கியோ அல்லது இந்த பக்கமாக ஒளிக்கு எதிராக செல்வீர்களானால் உங்கள் நிழல் உங்களுக்கு முன்பாக செல்வதை நீங்கள் காண முடியும். நீங்கள் சூரியன் இருக்கும் இடத்தை நோக்கி புறப்படுவீர்களா னால், உங்கள் நிழல் உங்களுக்கு பின்புறம் இருக்கும். 34. இப்பொழுது கவனியுங்கள், "நியாயப்பிரமாணம் அனைத்தும் வரப்போகிற நன்மைகளின் நிழலாய் இருக்கிறது..." --பாருங்கள், ஒரு நிழல் மாத்திரமே. இப்பொழுது, பழைய ஏற்பாட்டின் கீழ், அவர்கள் அவ்விதமாக ஆண்களுக்கு மாமிசத்தில் செய்த விருத்தசேதனம் இந்நாளில் பரிசுத்த ஆவியானவரால் இருதயத்தில் செய்யப்படுகிற விருத்தசேதனத்திற்கு மாதிரியாய் இருக்கிறது என்று பவுல் கூற முயற்சிக்கிறான். கற்பலகைகளின் மேல் எழுதப்பட்ட கற்பனைகளை முன்பு அங்கே எப்படி வைத்திருந்தார்கள். இக்கடைசி நாட்களில் அவைகளை நம்முடைய இருதயமாகிய மாமிச பலகைகளில் தாம் எழுதுவதாக தேவன் கூறியுள்ளார். 35. தவறு என்பதை அறிந்து கொள்வதற்கு, அவர்களுக்கு அங்கே ஒரே வழி மாத்திரமே இருந்தது... "களவு செய்யாதிருப்பாயாக". அவர்கள் அதை கற்பனையில் பார்க்க வேண்டும். ஒப்புரவாகுதலைக் கொண்டு வருவதற்கு- கொண்டு வருவதற்கு நியாயப் பிரமாணமானது கூட்டப்பட்டு வந்தது. ஏனென்றால் நியாயப்பிரமாணம் இல்லையென்றால், நல்லது.... நியாயப் பிரமாணம் இல்லையென்றால், பாவமும் இல்லை. ஏனென்றால் அது தவறல்ல என்றால்... 36. சிகப்பு விளக்கை எரியவிடக் கூடாது என்று இப்பட்டணத்தில் சட்டம் சொல்லுமானால் நீங்கள் அதை செய்ய முடியாது; ஏன், சிகப்பு விளக்கை எரியவிடக்கூடாது என்று இப்பட்டணத்தில் சட்டம் சொல்லவில்லை என்றால் நீங்கள் சிகப்பு விளக்கை எரியச் செய்யலாம். நீங்கள் தவறேதும் செய்யவில்லை. ஏனென்றால் செய்யாதே என்று சட்டம் சொல்லவில்லை. 37. ஆகையால் நியாயப்பரமாணம் கோபாக்கினையை கொண்டு வந்தது. அல்லது பாவத்தை காட்சியில் கொண்டு வந்தது. பாருங்கள், அவர்களுக்கு இல்லாதிருந்தது... முன்பு அவர்கள் அவை அனைத்தையும் செய்தார்கள். கீழாக.... நியாயப்பிரமாணத்திற்கு முன்பு பாவம் இல்லாதிருந்தது. காரணம் என்னவென்றால் அங்கே அவைகள் பாவம் என்று சொல்ல நியாயப் பிரமாணம் இல்லாதிருந்தது. ஆனால் நியாயப்பிரமாணம் வந்தபோது, பரிபூரணம் அடையும் வரை கூட்டப்பட்டது. 38. இப்பொழுது, மனிதன். எப்போதும் தன்னைத்தானே இரட்சித்துக் கொள்வதற்காக ஏதோ ஒன்றை கண்டுபிடிக்க எத்தனித்திருக்கிறான். அவன் இன்றும் அதே காரியத்தைச் செய்து; அதில் அவன் தவறாதவனாக இருக்கிறான். 39. கடந்த வாரம் இந்தியாவில் ஜனங்கள் சூரியனைப் பார்த்துக் கொண்டு முழுவதும் குருடாகவும் தங்கள் ஆத்துமாவிற்கு ஆறுதல் தேடியும் வந்தார்கள். அவர்களில் சிலர் தங்கள் விரல் நகங்களை தங்கள் கரங்களின் பின்பக்கமாக வளர விட்டு, அதைப் போல, 40-வருடங்களாக தங்கள் கைகளை தொங்க விடாமல் மேலே உயர்த்திக் கொண்டு தங்கள் ஆத்துமாவிற்கு சமாதானத்தை தேடுவதாக கூறுகின்றனர்... மற்றவர்கள் தங்கள் தேவர்களை சாந்தப்படுத்தவும் சமாதானத்தை தேடி முயற்சித்தும் தங்கள் காலடி வெந்து போகும் அளவுக்கு எரிதழலின் மீது நடந்து சென்றனர். சமாதானத்தை தேடி, உடைந்த பழைய கண்ணாடி குப்பிகள் இன்னும் மற்றவைகளின் மேல் படுத்துக் கொண்டும் கூர்மையான பெரிய ஆணிகளை உடைய ஒரு பலகையின் மீதும் மற்ற ஒவ்வொன்றின் மீதும் படுத்துக் கொண்டும் உள்ளனர். ஆனால் அவர்களுக்கோ சமாதானம் இல்லை. ஏன் என்றால் அவை அனைத்தும் விக்கிரக ஆராதனைகளே. அமெரிக்காவில் இருக்கிற நாமோ இங்கே நம்முடைய ஆத்துமாவிற்கு சமாதானத்தை தேடியும் மெய்யான ஜீவனுள்ள தேவனை தேடியும் தெருவைக்கூட கடந்து செல்வதில்லை. அது சரி, ஆனால் இவைகள் அனைத்துமே மனிதனுடைய பேய்த்தனமான சிந்தனைகளே-! 40. முன்பு, தேவன் நியாயப்பிரமாணத்தை அளித்து, அது கூட்டப்பட்டு இக்காரியங்கள் பாவம் என்று நமக்கு காண்பித்தார். ஆனால் இப்பொழுது நியாயப் பிரமாணம் பாவத்தை போக்க முடியாது. பாருங்கள், அது பாவத்தை பெரிதுபடுத்தியது. 41. ஏனெனில் நீ இதை செய்யக் கூடாது என்று நியாயப் பிரமாணம் சொல்லவில்லை என்றால், ஏன், அதுவல்ல... அதுவல்ல.... நீ அதற்கு உட்பட்டு அல்லது அதை உடைத்து, அது... நீ அதை உடைக்க முடியாது, ஏனென்றால் எந்த பிரமாணத்தையும் உடைக்க முடியாது. 42. ஆனால் நியாயப்பிரமாணம் அமலுக்கு வரும் போது பிறகு பாவமானது வெளிப்படுகிறது. பிறகு அவைகள்... "களவு செய்யாதிருப்பாயாக, விபச்சாரம் செய்யாதிருப்பாயாக, பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக" இவைகள் அனைத் தையும் அது கூறும். அவர்கள் இதற்கு முன் இதை செய்தனர். ஆனால் அது பாவமாக எண்ணப்படவில்லை. ஏனெனில் அங்கே அதற்கெதிராக நியாயப் பிரமாணம் இல்லாதிருந்தது. ஆனால் நியாயப்பிரமாணம் வந்த போது, அது மனிதனை அவன் திருடக்கூடாது, அவன் பொய் சொல்லக்கூடாது, அவன் விபசாரம் செய்யக்கூடாது என உணர்வடையச் செய்தது. எல்லா கற்பனைகளும் பெரிதுபட செய்தது, ஆனால் இன்னும் நியாயப்பிரமாணத்தி னால் பாவத்தை போக்க முடியவில்லை. அது பாவம் என்று மனிதன் அறிந்து கொள்ள செய்தது. அதன் பின்பு கிறிஸ்து வந்த போது, கிறிஸ்து பாவத்தை எடுத்து போட வந்தார். பாருங்கள்? 43. இப்பொழுது, நியாயப்பிரமாணமானது பாவம் செய்தவனுக்காக ஒன்று அறியாத ஒன்று சாக வேண்டும் என்பதை மாத்திரம் அவர்கள் அறியும்படி செய்தது. அந்த நியாயப்பிரமாணம் முன்பு ஏதேன் தோட்டத்தில் தொடங் கியது. (நியாயப்பிரமாணம் மோசேயின் மூலம் கொடுக்கப்பட்டது - தமிழ் ஆக்கியோன்.) அதன் பின்பு இப்பொழுது அவர்கள் ஒரு ஆட்டையோ அல்லது ஒரு காளையையோ அல்லது ஏதோவொன்றை கொன்று பலி பீடத்தின் மேலும் மற்றவைகளின் மேலும் இரத்தத்தை ஊற்றினார்கள்; ஏனென்றால் அது மூடுதலாகவோ அல்லது பதிலீட்டு பலியாகவோ இருந்தது. ஆனால் அது பாவத்தை போக்க முடியவில்லை. ஏனென்றால் மனிதனுடைய ஜீவனுக்கு ஈடு செய்வதற்கு மிருகத்தின் இரத்தம் பெலனற்றதாக இருந்தது. ஏனென்றால் மனிதனின் ஜீவன் மிருகத்தின் ஜீவனைககாட்டிலும் உயர்ந்ததாக இருந்தது. 44. இன்றிரவு நாம் இங்கு அமர்ந்திருக்கிறோம். நாம் அனேகமாக ஜெர்மன் நாட்டையோ ஐரிஸ் நாட்டையோ இப்படியாக சில நிறங்களை உடைய ஜனங்களாகவும் இருக்கிறோம். அவர்கள் கருப்பாகவோ வெள்ளையாகவோ மஞ்சளாகவோ அல்லது என்ன நிறத்தை உடையவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. நாம் அனைவரும் ஒரே மனிதனிலிருந்து வந்தோம். பாருங்கள்? இதை விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கலாம். இருண்ட ஆப்பிரிக்காவிற்கு சென்று கருப்பு மனிதனைக் கண்டு நீங்கள் சுகவீனமாக இருப்பீர்களானால் அவன் தன் இரத்தத்தை உங்களுக்கு செலுத்த முடியும். உங்களுடைய இரத்தம் மிகச்சரியாக அவனுடையதைப் போன்று இருக்கும். அல்லது நீங்கள் சீனாவுக்கு செல்ல நேர்ந்தால் அங்குள்ள ஒரு மஞ்சள் மனிதனை கண்டு, அவன் தன் இரத்தத்தை உங்களுக்கு செலுத்தலாம். பாருங்கள்? அல்லது இந்தியாவில் இருக்கும் பழுப்பு மனிதன் தன் இரத்தத்தை உங்களுக்கு செலுத்த முடியும். "தேவன் ஒரே இரத்தத்தினால் சகல தேசத்தையும் ஜனங்களையும் படைத்தார்." ஆனால் இவ்வுலகில் உள்ள ஒரு மிருகத்தின் இரத்தத்தையாகிலும் மனித இரத்தத்தோடு ஒப்பிடவே முடியாது. பாருங்கள்? மிருகங்களின் இரத்தம் அவைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டது. ஆனால் மனித இரத்தம் எல்லோருக்கும் ஒன்றே. 45. இப்பொழுது, இந்த ஜனங்களில் சிலர் பேசுகிற சித்தாந்தங்களும், இங்கு பள்ளிக்கூடத்தில் போதிப்பவைகளும், கீழே மிருகத்தின் உயிரிலிருந்து நாம் பரிமாண வளர்ச்சி அடைந்தோம் என்பதை எடுத்துக் கொள்ள முடியாது. அது அவ்வாறு இருக்குமாயின் மிருகத்தின் இரத்தத்தை எடுத்து மனிதனுக்கு செலுத்த முடியும். ஆனால் மனித இரத்தமும் ஜீவனும் ஒரே விதமாக உள்ளது. ஆனால் மிருகத்தின் ஜீவனில் அவைகளில் சில... பாம்பு போன்ற சிலவற்றிற்கு குளிர்ந்த இரத்தமும்; மீனுக்கு குளிர்ந்த இரத்தமும் உள்ளது, ஆனால் இப்பொழுது ஒரு கரடி, கடம்பை மான் (elk - ஐரோப்பாவில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவகை மான்) அல்லது நாய் அல்லது குதிரை இவைகள் வித்தியாசமானவைகள். அவைகளில் ஒன்றின் இரத்தத்தை எடுத்து மற்றொன்றுக்கு செலுத்த இயலாது. ஏனெனில் அவைகள் அனைத்தும் வேறுபட்டவைகள், ஆனால் மனிதர்கள் அனைவரும் ஒன்றாயிருக்கின்றனர். 46. மனிதனால் பிறக்காத இயேசு வரும் வரை நியாயப் பிரமாணத்தின் கீழ் இருந்த ஒரே பரிகாரம் மிருகத்தின் இரத்தம் செலுத்தப்படுவது மூலமே. இப்பூமியின் மேல் எந்த மனிதனும் அவருடைய தகப்பனாக இல்லை. அவருக்கு ஒரு தாய் இருந்தாள், அத்தாய் ஒரு கன்னிகை, கன்னி மரியாள், பதினெட்டு வயதுள்ள ஒரு பெண். பரிசுத்த ஆவி அவள் மேல் நிழலிட்டது, பிதாவாகிய தேவனாக இருக்கிறவர் தாமே, வார்த்தையை உரைத்து உலகத்தை உண்டாக்கினவரே அவரை சிருஷ்டித்தார். 47. ஞாயிறன்று எவ்விதமாக நாம் விளங்கிக் கொண்டோம் என்பது உங்களுக்குத் தெரியும். தேவன் பேசும்போது அது அப்படியே நடந்தாக வேண்டும். அதிலிருந்து அது விலகிச் செல்ல அங்கு வழியே இல்லை. "உண்டாகக்கடவது" என்று தேவன் உரைத்த போது, அது அப்படியே ஆயிற்று. ஒன்றும்.... அந்த வார்த்தை தானே!..... அந்த வார்த்தை ஒரு சிந்தையாய் இருந்தது. தேவன், அவர்... முன்பு... வார்த்தையானது பேசப்பட்ட சிந்தை. தேவன் தம் சிந்தையில் சிந்தித்து, அது உண்டாயிருக்கும்படி உரைத்தார். 48. நம்முடைய இருதயத்தில் இருக்கும் விசுவாசம், நம்முடைய இருதயத்தில் இருக்கும் தேவனுடைய விசுவாசம் (faith of God) அதை தெளிவாக காண முடியும். அது ஒரு விசுவாசமாகி அதன் பின்பு நாம் அதை பேசும்போது அது உண்டாயிருக்கும், அதே காரியம் தான், ஏனெனில் கிறிஸ்துவின் சிந்தை அம்மனிதனில் இருக்கும். அதனால் தான் சுகமாகுதல் இன்னும் மற்றவைகள் உண்டாகிறது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்ற பூரண வெளிப்பாடு உங்களுக்கு இருக்கும் போது, பின்பு எப்படி நடப்பது என்று உங்களுக்கு தெரியும். அது தான், ஏனெனில் அது ஒரு கிறிஸ்தவ நடை. இப்பொழுது, மிருகங்களின் இரத்தம் பாவத்தை போக்காது. 49. பின்பு இயேசு வந்த போது, தேவனாக இருந்து, மாமிசத்தில் வெளிப்பட்டார். அவருடைய இரத்தம் வேறெந்த மனிதனுடைய இரத்தமும் அல்ல. நாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு தீர்க்கதரிசியும் ஒவ்வொரு பெரிய மனிதனும் மானிட இரத்தமாக இருந்தது. ஆனால் இந்த மனிதனுக்கோ தெய்வீக இரத்தம் இருந்தது. தேவன் தாமே இரத்த அணுக்களை சிருஷ்டித்தார். 50. அந்த நபர் நுண்ணோக்கியின் வழியாக அதை எப்பொழுதாவது பார்த்தீர்கள் ஆனால் நீங்கள் ஒரு இரத்த அணுவின் மூலம் வந்தீர்கள். சில வாரங்களுக்கு முன் நான் பார்த்தேன். விலங்குகள் இனவிருத்தியின் போது, எனவே உங்களுக்கோ... அல்லது கால்நடைகளுக்கோ ஒரு கோடி உயிர் அணுக்கள் அங்குள்ளது. சாதாரண மனிதனிடத்திலும் அந்த உயிர் அணுக்கள், சிறிய இரத்த அணுக்கள் அதில் மோதுகிறது. 51. ஆனால்.... இந்த இடத்தில், மனிதனுடைய எந்தச் செயலுமின்றி தேவன் தாமே இந்த இரத்த அணுவை சிருஷ்டித்தார். அதிலிருந்து தம்முடைய சொந்த குமாரன் இயேசு கிறிஸ்து வந்தார். அதில் தேவன் வாசம் செய்து இப்பூமியின் மேல் இம்மானுவேல் ஆனார். அது தான் அந்த காட்சி. நீங்கள் இரட்சிப்படைவதற்கு அதைத்தான் விசுவாசிக்க வேண்டும். பின்பு இயேசு அதை இலவசமாக செய்யவில்லையா, இலவசமாக, தம்முடைய இருதயத்தில் உள்ள அன்போடு தம்முடையவர்களுக்காகவும், உலகத்தின் பாவங்களையும் தம் மீது ஏற்றுக் கொண்டு நம்முடைய பாவங்களை கல்வாரிக்கு எடுத்துச் சென்று இரத்தம் சிந்தி கல்வாரியில் மரித்தார். 52. இப்பொழுது அது என்னால் என்ன செய்ய முடியும், என்பதின் பேரில் அல்ல அது. நான் நல்லவனா அல்லது கெட்டவனா என்பதில் அல்ல அது, அவர் நல்லவராக இருந்தார் என்பதில் தான் இருக்கிறது. அதைச் செய்ய என்னால் ஒரு போதும் நல்லவனாக இருக்க முடியாது. அதை செய்ய நீங்கள் நல்லவராக இருக்க முடியாது. அது எப்போதாவது உங்களால் அதைச் செய்ய முடியுமானால் நீங்கள் இயேசு கிறிஸ்துவின் பின் தகுதியில் நிற்க முடியும். அதை நான் இப்பொழுது உங்களுக்கு சொல்கிறேன், ஏனெனில் அங்கே உங்களால் ஒன்றைகூட செய்ய இயலாது. 53. ஆனால் தேவனோ நாம் எல்லாருடைய பாவங்களையும் அவர் மீது சுமத்தினார். அவர் மரித்தார். ஏனெனில் அவர் ஒரு பாவியாக மரித்தார். வேதம் சொல்லுகிறது, "அவருடைய ஆத்துமா பாதாளத்திற்கு சென்றது." அது சரியே. அவர் அங்கிருந்த போது, அவர் நீடிய பொறுமையுள்ள நோவாவின் நாட்களில் மனந்திரும்பாமல் போன காவலிலுள்ளவர்களுக்கு பிரசங்கித்தார். 54. "அவர் தமது சரீர அழிவை காணவொட்டார், தமது ஆத்துமாவை பாதாளத்தில் விடமாட்டார்." அது முடியாது, அவருக்குள் அறிக்கை செய்யப் ரபட்ட நமது விசுவாசத்தின்படி புதிய ஆவியில் நாம் பிறந்தவர்களாகவும், அவர் கல்லறையிலிருந்து வெளி வந்தது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக நாம் அனைவரும் அவருடைய இரண்டாவது வருகையில் உயிர்த் தெழுவோம் என்பதை நமக்கு காண்பிக்கும் பொருட்டு மூன்றாம் நாள் நம்முடைய நீதிக்காக அவர் உயிரோடு எழுந்தார். ஓ! எப்பேர்ப்பட்ட ஒரு பூரண நம்பிக்கை! 55. ஓ! இவ்வுலகத்தின் மதங்களையும் அதன் மூட பழக்கவழக்கங்களையும் நீங்கள் பார்க்கும் போது, நம்முடைய இரட்சிப்பும் திட நம்பிக்கையும் பாதாளத்திலுள்ள எந்த பிசாசுகளும் அசைக்க முடியாதபடி ஒரு அடிப்படை உபதேசத்தின் மேல் அஸ்திபாரமிடப்பட்டுள்ளதை காணலாம். அவைகளை நீங்கள் அழகுபடுத்தி பார்க்க முடியும். புத்த மதம் ஓர் அழகான மதம். இந்து மதம் ஓர் அழகான மதம். ஆனால் சகோதரனே, அவைகள் எவ்வளவு ஜீவன் அற்றதாக இருக்க முடியுமோ அவ்வளவு ஜீவனற்றதாக இருக்கிறது. 56. ஜீவன் எங்கே உள்ளது? ஜீவன் இரத்தத்தில் உள்ளது. இரத்தமே ஜீவனாய் உள்ளது. ஒரே மனிதன் தான் சரியான இரத்தத்தை சிந்த முடியும். ஏனெனில் அவர் தேவனுடைய சொந்த இரத்தமாயிருந்தார். அவர் அந்த இரத்தத்தை சிந்தி உங்களையும் என்னையும் மீட்டுக்கொண்டார். ஆகையால் நம்முடைய இரட்சிப்பு கிறிஸ்து இயேசுவில் உள்ளது. நமக்காக கல்வாரியில் அதை செய்தார். நாம் எவ்வளவு தாழ்ந்தவர்களாக இருந்தாலும், எவ்வளவு நல் ஓழுக்கம் அற்றவர்களாக இருந்தாலும், நாம் எவ்வளவு மாசடைந்தவர்களாக இருந்தாலும், அதில் ஒரு முக்கியமும் இல்லை. நாம் நமது பாவங்களை அறிக்கை செய்து உண்மையான உள்ளத்தோடு கல்வாரியை நோக்கிப் பார்க்கும் போது அங்கே கல்வாரியில் அது முடிந்து விட்டது, அது சரியே. உனக்கு பதிலளிப்பதற்கு தேவன் கடமை பொறுப்பின் கீழ் இருக்கும் வரை அவ்வறிக்கையானது உன் உதட்டை விட்டு செல்லக்கூடாது. அது சரியாக இருக்கிறது. ஓ! நான் அதை நினைக்கும்போது! 57. ஓ, பவுல் கூறியதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை... பவுலின் தலையை வெட்டி சாக்கடைக்குள் எறிந்த அக்கட்டிடத்தில் முன்பொரு நாள் நான் நின்று கொண்டிருந்தேன். "மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயம் கொடுக்கின்ற தேவனுக்கு ஸ்தோத்திரம்" என்று அவன் சொன்னதற்கு சற்று முன்பு... என நினைக்கிறேன். பாருங்கள்? அது இவ்விதமாக இளைப்பாறுகிறது. ஓ, அதன் காரணமாகத் தான் அதைக் குறித்து பேச விரும்புகிறேன். 58. கவனியுங்கள், வாலிபர்களில் சிலர், நீங்கள் அதை உண்மையாக காணாத வரை நீங்கள் வாலிபனாக இருந்து உடைந்து போகலாம். இங்கே நீங்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டு நீங்கள் உயிர் வாழ்வதற்கு இரண்டு நாட்களோ அல்லது இரண்டு மணி நேரம் மாத்திரமே உள்ளது என்று மருத்துவர் கூறும் வரை சற்று பொறுத்திருங்கள். இதய துடிப்பானது சீரற்று போய் உங்களுடைய சட்டையின் கையின் (sleeve) வழியாக அது மேலே வரும் வரை சற்று பொறுத்திருங்கள். ஓ, சகோதரனே, பின்பு நீங்கள் எல்லாவற்றோடும் தேடுவீர்கள். அதன் பிறகு உயிருக்கு என்ன தான் விலையிருக்கப் போகிறதோ அது முடிந்து விட்டது. உங்கள் தலையில் உள்ள முடியானது நரைக்க ஆரம்பிக்கும் வரையிலும் காத்திருந்து முடிவற்ற நித்தியத்தை தூரத்தில் எதிர் நோக்குவதை நீங்கள் உணர்ந்து; இப்பொழுது உங்களுக்குள் ஜீவித்துக் கொண்டிருக்கும் இந்த ஆத்துமாவானது உடைத்துக் கொண்டு வெளி வருவதைப் போலவும், ஒரு பல்லை பிடுங்குவதைப் போலவும் இவ்விதமாக உங்களிலிருந்து இழுத்துக் கொண்டு எங்கு செல்கிறோம் என்று நீங்கள் அறியாத ஒன்றுக்குள் செல்லும். நீங்கள் இப்பொழுதே இதைக்குறித்து சிந்தித்து அதை சரி செய்து கொள்வது நல்லது. ஏனென்றால் நீங்கள் மனந்திரும்ப வாய்ப்பேதும் இல்லாமல் எதிர்பாராத விதமாக திடீர் என்று மறைந்து போய் விடாமல் (சகோ.பிரான்ஹாம் தனது விரலை சொடுக்குகிறார் - ஆசிரியர்.) அதை இப்பொழுதே செய்யுங்கள். 59. அங்கே, அமெரிக்க ஜனங்களுக்கு போக்கு (excuse) சொல்ல முடியாது. நெடுந் தொலைவிலுள்ள தென் ஆப்பிரிக்காவிலிருந்தும் - இந்தியாவிலிருந்தும் நியாயத்தீர்ப்பில் அந்த புறஜாதிகள் இந்த சந்ததியாரோடெழுந்து நின்று இவர்களை குற்றம் சுமத்துவார்கள், ஏனெனில் வெளிச்சமும், சுவிசேஷமும், சபைகளும், ஆசீர்வாதங்களும், சகலமும் இங்கே நமக்கிருந்தது. நாம் அதை ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணித்தோம். அங்கு தான் சிக்கல் இருக்கிறது நண்பனே. நான் இப்பொழுது அதை வெளிப்படையாக கூறுகிறேன். ஏன் என்றால் அது உங்கள் நன்மைக்காகத்தான். பாருங்கள். ஏனென்றால் நீங்கள் அதை செய்யத்தான் வேண்டும். 60. இப்போது "நியாயப்பிரமாணம் ஒரு நிழலாய் இருக்கிறது..." ஓ! அதை நான் நினைக்கும் போது! "நியாயப் பிரமாணமானது வரப் போகிற நன்மைகளின் நிழலாய் இருக்கிறது." நியாயப்பிரமாணம் எதைக் கொடுத்தது என்று பாருங்கள். அடுத்த அதிகாரமாகிய எபிரேயர் பதினோராம் அதிகாரத்திற்கு திருப்பலாம். நியாயப்பிரமாணத்தின் கீழ் தானியேல் என்ன செய்தான் என்று பாருங்கள். நியாயப் பிரமாணத்தின் கீழ் ஏனோக்கு என்ன செய்தான் என்று பாருங்கள். (ஏனோக்கு மனசாட்சியின் காலத்தில் இருந்தான். தீர்க்கதரிசி ஏனோக்கு நியாயப்பிரமாண காலத்தில் இருந்தான் என்று தவறுதலாக குறிப்பிடுகிறார் - தமிழாக்கியோன்.) நியாயப்பிரமாணத்தின் கீழ் மோசே என்ன செய்தான் என்று பாருங்கள். பிறகு அவன் அந்த பலியின் நிழலில் மாத்திரமே ஜீவித்தான் என்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மெய்யான உயிர்த் தெழுதல் இருக்கும் கிறிஸ்தவ சபை, இன்றைக்கு என்ன செய்ய வேண்டும்? இன்றிரவு நாம் எங்கு நின்று கொண்டிருக்கிறோம், நண்பர்களே? 61. அது ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் சர்வாயுதவர்க்கத்தை அணிந்து கொள்ளச் செய்யவேண்டும் என்று நான் உங்களுக்கு சொல்லுகிறேன். அங்கே கூறியிருப்பது போல, "தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்துக் கொள்ளு ங்கள். மேலும், மார்கவசம், தலைசீரா, கேடயம் மற்ற அனைத்தையும் அணிந்து நிச்சயமுடையவர்களாயிருங்கள்." பவுல் இதை போருக்கு அணிந்து செல்கிற யுத்த வீரனுக்கு ஒப்பிடுகிறான். சத்துருவின் தந்திரங்கள் உள்ளே வரும் போது, வெளியே புறப்பட்டு போய் உங்கள் கேடயத்தை பிடித்து அதை சந்தியுங்கள். 62. இப்பொழுது நியாயப்பிரமாணமானது அதை கொடுக்க கூடுமானால் இயேசு கிறிஸ்துவின் மெய்யான இரத்தம் என்ன செய்ய வேண்டியதாக இருக்கும்! ஒரு மரித்த எழுத்து அதைச்செய்யும் போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வின் உயிர்த்தெழுந்த பலமும் வல்லமையும் ஆவியும் என்ன செய்ய வேண்டியதாக இருக்கும்! 63. இப்பொழுது, நாம் மிகுந்த பயபக்தியோடு சபைக்கு வர வேண்டும். உண்மையான தேவனுடைய பரிசுத்தவான்களைப்போல சபைக்குள் பிரவேசித்து அங்கே நடந்து சென்று நமது ஸ்தானத்தை எடுத்துக்கொண்டு, கிறிஸ்துவின் மேல் நமது சிந்தையை வைத்து வைக்க வேண்டும். இவ்விதமாக, இவ்வுலகத்தின் காரியங்கள் அனைத்தையும் உதறி எறிந்து விட வேண்டும். நீங்கள் மெய்யாகவே மறுபடியும் பிறந்தவர்களானால்... (இது கொஞ்சம் உங்களை வெட்டலாம். ஆனால் இது தவறுகளை திருத்தும் வீடு என்று நீங்கள் அறிய வேண்டும்.) நீங்கள் மெய்யாகவே தேவ ஆவியால் பிறந்தவர்களானால், எப்படியாயினும் அங்குதான் உங்கள் இருதயம் இருக்கும். அதனால்தான்... உங்களுடைய நினைவுகள் தூரத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. பாருங்கள். நீங்கள் எப்பொழுதாகிலும்.... 64. இயேசு கூறினார், "என் வசனத்தை கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; என் வசனத்தை கேட்டு விசுவாசிக்கிறவனுக்கு!" (யோவான் 5:24) 65. இப்பொழுது நீங்கள் விசுவாசிப்பீர்களானால்!..... நீங்கள் அதை உங்கள் உதட்டினால் அறிக்கை செய்வீர்களானால், அது ஒன்றும் அதிக நன்மையை செய்து விடாது, ஆனால் உங்கள் இருதயத்திலிருந்து இயேசு தேவனுடைய குமாரன் என்பதை விசுவாசித்தால் முன்பு நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை நீங்கள் வாழமாட்டீர்கள். நீங்கள் எப்பொழுதாவது கல்வாரியின் உண்மையான காட்சியை கண்டிருப்பீர்களானால். உங்களால் முடியாது. இப்பொழுது நீங்கள் அரைகுறையாக பேசுவீர்களானால் நீங்கள்- நீங்கள் உங்களையே முட்டாள் ஆக்கிக்கொள்கின்றீர்கள். 66. ஆனால் இயேசு என்னவாக இருந்தார் என்ற உண்மையான காட்சி உங்களுக்கு கிடைத்திருக்குமானால்... ஓ! என்னே, நான் எவ்வளவாக தெய்வீக தன்மையை, இயேசு கிறிஸ்துவின் உயர்ந்த தெய்வீக தன்மையை பிரசங்கிக்க விரும்புகிறேன். புருஷர்களும் ஸ்திரீகளுமாகிய நீங்கள், அவர் யார் என்ன செய்தார் என்று மாத்திரம் உணருவீர்களானால், உங்களுடைய இருதயம் உங்களுக்குள் கிழிந்து அவருக்காக ஜீவிப்பதற்கு இவ்வுலகத்தின் குப்பைகளை தூர எறிந்துவிட விரும்புவீர்கள். தேவன் தாமே இறங்கி வந்து தம்மை தாமே வெளிப்படுத்தி உங்கள் இருதயத்திற்குள் வரும் வரை, அதை நீங்கள் உணர்வீர்களானால் ஓ, எவ்வளவு ஆச்சரியம் எப்படிப்பட்ட நபர் அவர்!.... 67. பிதாவாகிய தேவன் இஸ்ரவேல் புத்திரருக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த ஒரு பெரிய மேகத்தின் வடிவில் இருந்தார்; அன்று காலை நியாயப்பிரமாணத்தை எழுதுவதற்கு மலையின் மேல் அமர்ந்தார்; ஏன், ஒரு மிருகமானாலும் அம்மலையைத் தொட்டால், அது அம்பைக் கொண்டு ஊடுருவ எய்யுண்டு (சாக) வேண்டும். பரிசுத்தமாகுதல் மூலம் மாத்திரமே மோசேயை மேலே வரவழைத்தார். ஆரோன் கீழே வழியில், மலையின் அடிவாரத்தின் கண்காணித்து காவல் காத்தான்... அக்கினிஸ்தம்பம் மலையின் மேல் அமர்ந்த போது, மின்னல்களும் வெடித்தன, இடிமுழக்கங்களும் உண்டாயின, காரிருளும் சூழ்ந்து கொண்டது. யேகோவா தேவன், சகல நித்தியத்தையும் சிருஷ்டித்தவர், தமக்காக சிருஷ்டித்த மலையின் கொடு முடியில் இறங்கின போது கார்மேகங்களின் பலத்த சத்தமும் மின்னல்களும் உண்டாயிற்று, பூமியும் அதிர்ந்தது. அது வரை இஸ்ரவேலர்கள் தூரத்தில் பாளையத்தில் இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருக்கும் பலியோடும் சுற்றிலும் நின்றுகொண்டு இருந்தார்கள். "நாங்கள் சாகாதபடிக்கு தேவன் எங்களோடு பேச வேண்டாம். மோசே பேசட்டும்" என்று கூறும் அளவிற்கு. அதை நினைத்துப் பாருங்கள். 68. அதே சர்வவல்லமையுள்ளவர், மகத்துவமானவர், தம்மைத்தாமே தாழ்த்தி தம்மைத் தாமே வெளிப்படுத்தி, எந்த ஒரு மனிதனும் தன் கரங்களினால் தொடும்படி மாமிச சரீரத்திற்குள் வந்தார், அவர் என்ன செய்து கொண்டு இருக்கிறார்? தமது வழியை உரிமைகோரி ஒரு மனிதனுக்குள் வரும்படி முயற்சிக்கிறார். அதன் பிறகு எந்த இரத்தமும் செய்ய முடியாததை, தம் சொந்த இரத்தத்தை பலியாக கொடுத்து அவர் அதை செய்தார்! அவர் பரலோகத்தின் விலைமதிக்க முடியாத விலை என்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை-! அவர் இராஜாக்களுக்கெல்லாம் இராஜா என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! அவர் தம்மைத் தாமே வெளிப்படுத்தி, பாவம் நிறைந்த மனிதனுடைய கரங்களில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, அடிக்கப்படவும் காரி துப்பப் படவும், நொறுக்கப்படவும், சிலுவையில் தொங்கி மரிக்கவுமே கீழே வந்தார். அவர் அங்கே நின்று கொண்டிருந்த போது, யாரோ ஒருவர் கூறினார்... "நல்லது," அவர் கூறும்போது, "நான் என் பிதாவை வேண்டிக்கொண்டால் அவர் எனக்காக பத்து லேகியோன் தூதர்களை அனுப்புவார். ஆனால் என் இராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல" என்றார். 69. அங்கே கூட்டத்தில் இருந்தவர்கள், "இவனை அகற்றும். இவனை அகற்றும்" என்றார்கள். 70. அவர் ஏன் திரும்பி, "உங்களை அகற்றும்" என்று ஏன் கூறவில்லை? அவரால் முடியாது என்பதற்கான காரணம் இங்குள்ளது நண்பர்களே. அதை பாருங்கள். அவர்கள் அவருடைய சொந்த பிள்ளைகள். ஒரு மனிதனுடைய பிள்ளைகள் தன் தகப்பனுடைய இரத்தத்திற்காக கூக்குரலிடுவதை சிந்தித்துப் பாருங்கள்... என் பிள்ளைகள் என் இரத்தத்திற்காக பகை உணர்வு கொள்வார்களானால், "என்னை எடுத்துக்கொள்" என்று சொல்வதைத் தவிர அங்கே வேறொன்றும் இருக்காது. அவர் அவ்வாறு செய்ய மறுப்பாரானால் அவர் தமது பிள்ளையை; அவருடைய சிருஷ்டியை அவருடைய மனிதர்களை இழப்பார். அவர்கள் தான் அவருடைய இரத்தத்திற்காக கூச்சலிட்டனர். தன் தகப்பனுடைய இரத்தத்திற்கு பிள்ளைகளே கூக்குரலிடுவதை கற்பனை செய்ய முடிகிறதா? அதன் காரணமாகத்தான் அவரால் இல்லை என்று கூற முடிய வில்லை. அவர் இல்லை என்று சொன்னால் அவர்கள் இழந்து போகப்படுவர். நான் என் பிள்ளைகளுக்காக இலவசமாக மரிக்கிறேன். மற்ற எந்த தகப்பனும் செய்வது போல. அவர் என்னவாக இருந்தார் என்று பாருங்கள். அவருடைய சொந்த பிள்ளைகள் அவருடைய இரத்தத்திற்காக கூக்குரலிட்டனர். 71. நியாயப்பிரமாணத்தின் நீதியானது இரத்தம் தேவை என்றது. ஆட்டின் இரத்தமும் அதை செய்ய முடியாது. வெள்ளாட்டின் இரத்தமும் அதை செய்ய இயலாது. கால்நடையின் இரத்தம் அதை செய்ய முடியாது. தேவனுடைய இரத்தம் தானே அதை செய்ய வேண்டும். தேவன் மாமிசமானார். இவ்வுலகில் வாழ்ந்தார். அந்த மகத்தான இடிமுழக்க நபர் சீனாய் மலையின் கொடுமுடி-யில் இருந்தவர். இங்கு மாமிசத்தில் இருக்கிறார். 72. பின்பு அவர் வந்து உங்களுடைய இருதயத்தில் ஜீவிப்பதற்கு அவர் வழியை சுத்தம் செய்கிறார். சீனாய் மலையிலிருந்து இடிமுழக்கம் செய்த அதே ஆவி இப்பொழுது மானிட இருதயத்தில் ஜீவிக்கிறார். எவ்வளவு ஆச்சரியமான ஒன்று!... என்னே, அது, அது ஒவ்வொரு இருதயத்தையும் துள்ள செய்ய வேண்டும். அதை சிந்தித்துப் பாருங்கள். 73. இப்பொழுது வேகமாக செல்லலாம். பவுல், 5 மற்றும் 6-வது வசனத்தில் இவ்விதமாக தொடர்ந்து சொல்லுகிறான். நாம் 19-வது வசனத்தை வாசிக்க முயற்சிக்கிறோம். எனவே நாம் துரிதமாக. அவன் 5-வது, 6-வது வசனத்தை தொடர்ந்து, எவ்வாறு நியாயப்பிரமாணமானது முன்நிழல்களாக (foreshadows) இருந்தது என்று பேசுகிறான். பழைய ஏற்பாட்டில் அது எவ்வாறு இருந்தது. நாம் அதனூடாக சென்று முன்பு ஒருநாள் ஓ, ஒருசில மாதங்களுக்கு முன்பு, அது ஞாயிறு பள்ளியாக இருந்தது. 74. ஒருவன் விபசாரம் செய்து அல்லது அவன் திருடி அல்லது ஓய்வு நாள் ஆசரிப்பதை மீறியோ அல்லது வேறெந்த கற்பனையையாவது மீறியோ, அவன் ஒரு பாவத்தை செய்தான். பின்பு அவன் ஒரு ஆட்டுக்குட்டியை பிடித்து அவ்வாட்டுக் குட்டியை மூப்பர்களிடத்தில் கொண்டு வரவேண்டிய தாயிருந்தது, அவர்கள் அதை பார்க்க வேண்டும். அந்த ஆட்டுக்குட்டி குற்றம் அற்றதாயும், குறையில்லாததாயும் இருக்க வேண்டும். இங்கு அதன் முக்கியத்துவத்தை பாருங்கள். குற்றமுள்ள ஒருவனுக்காக குற்றமற்ற ஆட்டுக் குட்டியாக இருக்க வேண்டும். ஆமென். நீங்கள் அதை பார்க்க முடியும் என்று நினைக்கிறேன். என்னே. 75. எனக்கு ஒரு சிறிய கதை நினைவுக்கு வருகிறது. நான் எப்போதாவது உங்களிடத்தில் கூறியிருக்கிறேனா, இல்லையா என்று எனக்கு தெரிய வில்லை. ஆது ஒரு கற்பனை கதையை போன்ற ஒன்று... நியாயப் பிரமாணத்தின் கீழ் வயதான தாய் குதிரைக்கு ஒரு சின்ன ஆண் குதிரை குட்டி ஒன்றிருந்தது. அது ஒரு கோவேறு கழுதை குட்டி. உங்களுக்குத் தெரியும், அதின் காதுகள் கிழிந்து தொங்கிக் கொண்டும், அதன் முழங்கால் முட்டு அடிபட்டும், ஓ, மாறுகண்ணுடையதும், பார்ப்பதற்கே பயங்கரமான கோவேறு கழுதைக்குட்டி... நல்லது, அந்த கோவேறு கழுதைக்குட்டி அது தன்னைத் தானே பார்த்துக் கொள்ளுமானால், "ஓ, என்னே! எஜமான் வெளியில் வரும் போது என்னை கொன்று போடுவார், ஏனென்றால் நான்... அவர் எனக்கு ஆகாரம் கொடுக்க மாட்டார். நான் வாழ்வதற்கு தகுதியில்லை. என்னை பாருங்கள், பார்ப்பதற்கு பயங்கரமான என்ன அலங்கோலமாக நான் இருக்கிறேன்!" என்று கூறினது. 76. அச்சிறிய குட்டியினிடம் தாய் பேசக்கூடுமானால், அது கூறும், "அன்பே ஒரு நிமிடம் பொறு. உன்னால் வாழ முடியும், ஏனென்றால் நீ என்னுடைய முதல் பலன். உனக்கு பிறப்புரிமை உண்டு. இப்பொழுது, எஜமான் வெளியில் வந்து உன்னுடைய இந்த எல்லா நிலைமைகளையும் பார்த்தால், அவர் புறப்பட்டு போய் ஒரு குற்றமில்லாத ஆட்டுக்குட்டியை கொண்டு வந்து அதை அடிப்பார். எனவே பார்ப்பதற்கு ஊனமாயுள்ள கோவேறுக்கழுதைக் குட்டியினால் வாழ முடியும்.'' நீங்கள் பாருங்கள். ஆசாரியன் ஒரு போதும் அந்த கோவேறு கழுதைக்குட்டியை பார்ப்பதில்லை; அவன் அவ்வாட்டுக் குட்டியை தான் பார்த்தான். அது அந்த கோவேறு கழுதைக்குட்டி பரிபூரணமானது என்பதனால் அல்ல; அந்த ஆட்டுக்குட்டி பரிபூரணமாய் இருந்தது என்பதே. 77. ஓ, அதை நீங்கள் பார்க்க முடியும் என நான் நம்புகிறேன். அது நீங்கள் நல்ல கிறிஸ்தவனாக இருப்பதினாலோ அல்லது இல்லாததினாலோ அல்ல, அது அவர் போதுமான நல்லவராக இருப்பதினால் தான். அவருடைய இரத்தம் பலியாக செலுத்தப்பட்டு, தேவன் அவரை ஏற்றுக் கொள்வாரானால் தேவன் உங்களைப் பார்க்காமல், அவர் அந்த ஆட்டுக்கு ட்டியை தான் பார்க்கிறார். ஓ, என்னே! 78. பின்பு இந்த சிறிய கோவேறு கழுதைக் குட்டி வாலை மேலே தூக்கிக் கொண்டு பெரும் சத்தமிட்டு குதித்து, வயலை சுற்றிலும் ஓடி ஒரு நல்ல தருணத்தை உடையதாய் இருந்தது. அது வாழப் போகிறது. ஆனால் பரிபூரணம் இல்லாத ஒன்றுக்கு பரிபூரணமுள்ள ஒன்று சாக வேண்டும். 79. அது வில்லியம் பிரன்ஹாமாகிய நான் தான். நல்லது ஒன்றுமில்லை, வாழ்வதற்கு தகுதியேயில்லை, நரகத்திற்கு போக தகுதியானவன், பாவம் நிறைந்த குடும்பத்தில் பிறந்து ஒரு பாவியாய் வளர்ந்து; நல்லதே இல்லை என்னைப்பற்றி, ஒரு நல்ல பகுதியேயில்லை. அது சரியே. ஆனால் ஒரு நாள் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன்! அல்லேலுயா! தேவன் கீழே கிறிஸ்துவை பார்த்த போது, கிறிஸ்து என் ஸ்தானத்தை எடுத்துக் கொண்டார். பிறகு தேவன் என்னைப் பார்ப்பது இல்லை; அவர் பரிபூரணமான ஒன்றைப் பார்க்கிறார். பின்பு நான் இங்கு இருக்கும் வரை, அவருக்குள்; பின்பு நான் பரிபூரணமாயிருக்கிறேன்; எனக்குள்ளாக அல்ல. அவருக்குள்: என்னுடைய பரிபூரணம் அல்ல! எனக்கு எதுவும் இல்லை; உங்களுக்கும் எதுவும் இல்லை. ஆனால் அது அவருடைய பரிபூரணத்தில் இருக்கிறது. 80. ஆகையால், "பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராக இருப்பது போல நீங்களும் பூரண சற்குணராக இருங்கள்" என்று இயேசு சொன்ன போது அவர் தவறேதும் செய்யவில்லை. ஒரு மனிதன் எவ்வாறு பரிபூரணமானவனாக இருக்க முடியும்? அவனது பரிபூரண விசுவாசமானது அவரில் இளைப்பாறிக் கொண்டு, "அவர் எனக்காக கிரயத்தை செலுத்தினார்" என்று சொல்லும் போது. இயேசு அனைத்தையும் செலுத்தினார். அவருக்கே அனைத்தையும் நான் கடன்பட்டிருக்கிறேன். பாவம், சிவேரென்ற கறையை விட்டுச் சென்றது. அவர் அதை உறைந்த மழையைப் போல கழுவினார். 81. அது நாம் அனைவரையும் சத்தமிடும் மெத்தடிஸ்டுகளாக செய்கிறது. (அது அப்படி செய்யவில்லையா?) நீங்கள் அதை நினைக்கும் போது! நீங்கள்.... பழைமை நாகரீக சத்தமிடும் அனுபவத்தில் நான் நம்பிக்கை உடையவன். அதில் நான் நம்பிக்கை உடையவன். ஆம், ஐயா. பிள்ளைகளுக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் கிடைக்குமானால் அவர்கள் எப்போதும் நன்றாய் உணருவார்கள். உங்களுக்குத் தெரியும். நான் என்ன அர்த்தத்தில் கூறுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். இன்று நமக்கு சபைகளில் சில ஆவிக்குரிய ஊட்டச்சத்துக்கள் தேவை. நீங்கள் அவ்வாறு நினைக்கவில்லையா? (சபையார், "ஆமென்" என்று கூறுகின்றனர் - ஆசிரியர்.) 82. ஒருமுறை ஒரு விவசாயியை எனக்கு நினைவூட்டியது. அவனுக்கு ஒரு சிறிய பழைய... அவ்விவசாயிக்கு ஒரு தானிய களஞ்சியம் ஒன்றிருந்தது. அவனுக்கு எல்லாவிதமான விவசாயத்திற்கு உகந்த நல்ல கருவிகளும் இருந்தது. அவன்- அவன் அவன் அந்த வயலை உழுவதற்கான இயந்திரம் இன்னும் மற்றவை கொண்டு விவசாயம் செய்ய வேண்டும். ஆனால் அவன் விவசாயம் செய்வதற்கு அதிக சோம்பலுள்ளவனாக இருந்தான். எனவே அவனுடைய வயலை களைகள் வளரும்படி விட்டுவிட்டான். சமயம் வந்த போது செய்வதற்கு ஒன்று மாத்திரமே இருந்தது, அதாவது, அவனது களைகளை வெட்டி களஞ்சியத்தில் போட்டான். 83. இங்கே வேறு ஒரு விவசாயியும் இருந்தான். பார்ப்பதற்கு அழகான தானிய களஞ்சியம் இல்லாதிருந்தது. ஆனால் அவனுக்கு..... அவன் ஒரு திறமைசாலி. அவன் வெளியில் வந்தான். அவன் ஒரு கடின உழைப்பாளி. அவனுடைய கால்நடைகளை போஷிக்க வேண்டிய காரணத்தால் அவன் வேலை செய்தான். மேலும் அவன் சில நல்ல ஒரு கால்நடை பயிர் மற்றும் பாசிப் பயறுகளை அறுவடை செய்தான், அதை அவன் களஞ்சியத்தில் வைத்தான். 84. அவ்விரண்டு பண்ணைகளிலும் சிறிய கன்றுக்குட்டி ஒவ்வொரு வருடமும் பிறக்கும், இந்த வருடமும்; மற்ற களஞ்சியத்தில் இருந்த கன்றுக்குட்டி களைகள் தான் அதற்கு தீவனமாக இருந்தது. ஆனால் அதற்கு அருமையான தானிய களஞ்சியம் அதற்கிருந்தது. இன்னொரு சிறிய கன்றுக்குட்டிக்கு அவ்வாறான ஒரு தானிய களஞ்சியம் இல்லாதிருந்தது, ஆனால் புசிப்பதற்கு அதற்கு ஏதோவொன்று இருந்தது. 85. அது இந்த சில சிறிய பழைய சபைகளை என் சிந்தையில் போட்டது. இந்த மகத்தான பெரிய உயர்ந்த, சென்று பார்க்க வேண்டும் என ஆவலை தூண்டும் இடங்கள், உங்களுக்குத் தெரியும், ஆயிரக்கணக்கான டாலர் மதிப்புள்ள குழல் வாத்தியங்கள் (ஆயிரக்கணக்கான டாலர் மதிப்புள்ளவை என்று நினைக்கி றேன்), மென்பட்டுத் துணியுடன் கூடிய (plush seats) இருக்கைகள் மற்ற அனைத்தும் என்று நான் கருதுகிறேன். ஆனால் புசிப்பதற்கு அங்கு ஏதாவது இருந்ததா? அது அடுத்த காரியம். 86. ஏதோ ஓரிடத்திலுள்ள சில சிறிய பழைய சபைக்கு நீங்கள் செல்ல நேர்ந்தால், உங்களுக்குத் தெரியும். ஆவிக்குரிய ஊட்டச்சத்துகளின் ஒரு பெரும் பகுதியை நீங்கள் அங்கு காண முடியும். தேவன் அவைகளை உங்கள் ஆவியின் வளர்ச்சிக்கு ஒத்தாசையாகவும், சற்று குதுகலமடையவும் உங்களுக்காக வைத்துள்ளார். அது தான் சுவிசேஷம் பிரசங்கித்தல். அல்லேலூயா! அது சபையை குதுகலமடைய செய்யவில்லை என்றால் அதனால் அங்கு ஒன்றும் செய்ய முடியாது. "விசுவாசம் கேள்வியினாலே வரும்; கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்." 87. இயேசு எனக்காக மரித்தார் என்று நான் கேள்விபடும்போது, "அது முடிவடைந்து விட்டது". தேவனுக்கு மகிமை! நான் இப்போது பாதுகாப்பாக உள்ளேன். ஏனென்றால் நான் அவருக்குள் இருக்கிறேன்," என்று நான் கூறுவேன். அவர் என்னை ஏற்றுக் கொண்டார். அது சரியே. அவர் என்னை தெரிந்து கொண்டார். அவர் உங்களை தெரிந்து கொண்டார். கிறிஸ்தவர்களாக இருக்கிற உங்கள் ஒவ்வொருவரையும் இயேசு தெரிந்து கொண்டார். அது உங்களுடையது. எல்லாம் சரி, அவர் உங்களை எடுத்துக் கொண்டார். 88. இந்த சிறு கன்றுக்குட்டி, அவைகளில் ஒன்று அருமையான இம்மாபெரும் தானியக் களஞ்சியத்திலிருந்து, கால்நடை தீவனங்கள் வைக்கக்கூடிய பதினான்கு - காரட் அறைகளிலிருந்து, உங்களுக்குத் தெரியும், தொழுவத்தில் கால்நடைகளுக்கான தனி கொட்டில் (stall) இன்னும் மற்றவைகளிலிருந்து வெளி வந்தது. அவ்வாறு அது வந்தபோது, பாவம் அந்த சிறிய கன்றுக் குட்டியால் நடக்கக் கூட முடியவில்லை. உங்களுக்குத் தெரியும், அது ரொம்ப பாவம், குளிர்கால முழுவதுமாய் களைகளையே தின்றது. எனவே மற்றது.... அதற்கு தானிய களஞ்சியத்திலிருந்து பெருமளவு கிடைத்தது. உங்களுக்குத் தெரியும். வெதுவெதுப்பான காற்று வீசும்போது, ஒருவிதமான... காற்று அதன் மீது வீசி அநேகமாக அதை கீழே தள்ளிற்று; அது ரொம்ப பாவமாக இருந்தது. 89. மறுபக்கம் இவ்விவசாயி தனது சிறிய பழைய வயதான கன்றுக் குட்டியிடம் திரும்பினான். ஓ, அது நன்றாக கொழுத்து, உங்களுக்குத் தெரியும், அது நல்ல உருவத்தில் இருந்தது. அங்கே அது வெளியே வரும்போது அது மேலும் கீழுமாக குதிக்க ஆரம்பித்து சுற்றி ஆடி உங்களுக்குத் தெரியும். அங்கே சுற்றிலும் குதித்து ஒரு நல்ல பெரும் பெந்தெகோஸ்தே கூட்டத்தை அனுபவித்துக் கொண்டிருந்தது. 90. அச்சிறிய கன்றுக்குட்டி என்ன செய்தது என்று உங்களுக்குத் தெரியுமா? எல்லா பெரிய காரியங்களையும் உடைய பெரிய தானிய களஞ்சியத்தில் இருந்த ஒன்று, உங்களுக்குத் தெரியும், அக்கன்று கீழ்நோக்கி இரகசியமாக சிறிய துளை வழியாக தன் கண்களால் பார்த்து, "ட்ஸ்க், ட்ஸ்க், ட்ஸ்க், நல்ல மதப்பற்று நல்ல மதப்பற்று!" என்று கூறியது. (சகோ. பிரான்ஹாம் அக்கன்றுக் குட்டியின் பரிதாபமான நிலமையை மெல்லிய சத்தம் எழுப்பி விளக்கிக் காண்பிக்கிறார் - ஆசிரியர்.) 91. இந்த சிறிய கன்றுக்குட்டியோ நன்மையை அனுபவித்துக் கொண்டு அது குதித்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை, அது கொழுத்திருந்தது. அது நன்மையை உணர்ந்தது. 92. அவ்வாறு தான் ஆவிக்குரிய ஊட்டச்சத்துக்களை ஒரு மனிதன் உண்மை யாக பெற்றுக்கொள்ளும் போது இருக்கிறான். தேவனுடைய வீட்டிற்கு வந்து, அவனது ஆத்துமா தேவனுடைய வார்த்தையால் போஷிக்கப்பட்டு தான் எங்கே நின்றுகொண்டு இருக்கிறான் என்பதை அங்கு அறிந்து கொள்கிறான். கல்வாரியில் இயேசு கிறிஸ்து எனக்குப் பதிலாக என்னுடைய இடத்தை எடுத்துக்கொண்டு மரித்தார் என்று நீங்கள் பார்க்கும் போது அவனது பழைய மூடப்பழக்கங்கள் அவனை விட்டகன்று, பிசாசின் வழிபாடு இன்னும் அனைத்தும் சிதறடிக்கப்பட்டு போகிறது. தூய தெய்வீக அன்பு அங்கு வருகிறது. அது என்னைத் தானே எப்பொழுதாவது ஒரு முறை உலகத்திற்கு மோசமாக நடந்து கொள்ள செய்கிறது. நல்ல பழைமையான ஊட்டச்சத்துகள் இங்குள்ளது. அதனால் தான் அதைக்குறித்து நான் மெய்யான நன்மையை உணருகிறேன், காரணம் என்ன வென்றால் நான் இந்த ஊட்டச்சத்துகளினால் பெலப்பட்டுள்ளேன். 93. இப்பொழுது, பவுல் கூறுகிறான். ஆராதனை செய்பவன், அவன் தவறு செய்திருப்பானேயானால் அவன் அச்சிறிய ஆட்டுக்குட்டியை கொண்டு வருகிறான். இப்பொழுது, பிரதான ஆசாரியன் அதை முழுமையாக பார்வை இட்டு சோதித்தறிந்து, அவ்வாட்டுக்குட்டியில் பழுதொன்றுமில்லை என்றும், எல்லாம் சரியாக இருக்கிறது என்றும் ஆசாரியன் கண்டால், அது அவ்வாறு இருக்குமானால், பிறகு அவன், அச்சிறிய ஆட்டுக்குட்டியை பலிபீடத்தின் மீது வைக்கிறான். 94. இங்கே தவறிழைத்த மனிதன் வந்து, "இப்போது நான் திருடி இருக்கிறேன்" என்று கூறுகிறான். நான் மரணத்திற்கு பாத்திரவான் என்பதை அறிந்துள்ளேன். ஏனென்றால் நான் தவறிளைத்துள்ளேன். நான் திருடுவதை தேவன் விரும்பவில்லை; அதை செய்யக்கூடாது என்று அவர் கற்பனை சொல்லுகிறது. இப்பொழுது, நான் என் கரங்களை இச்சிறிய ஆட்டுக்குட்டியின் மேல் வைக்கப் போகிறேன். 'திருடாதிருப்பாயாக' என்று தேவனுடைய கற்பனைகள் இங்கு சொல்லுகிறது. நானோ திருடியுள்ளேன். எனவே நான்... நான் மரணத்திற்கு பாத்திரவான் என்பதை அறிந்துள்ளேன். நான் திருடி உள்ளபடியால் ஏதோவொன்று என் பாவத்திற்காக பதிலுரைக்க வேண்டும். நான் அதை புசிக்கும் நாளிலே நான் சாவேன் என்று தேவன் கூறியுள்ளார். எனவே நான் திருடினேன். 'நீ திருடினாய், அதற்காக நீ சாக வேண்டும்' என்று தேவன் கூறியுள்ளார். நான் மரிக்க கூடாது என்றால், நான் ஆட்டுக்குட்டியை கொண்டு வரவேண்டும் என்ற தேவை அவருக்கு இருந்தது. எனவே நான் அவ்வாட்டுக் குட்டியை இங்கே கீழே வைத்து அச்சிறிய ஆட்டுக்குட்டியின் தலையின் மேல் என் கரங்களை வைத்து அது இவ்விமாக கத்திக்கொண்டே சென்றது. "தேவனாகிய கர்த்தாவே, நான் திருடியதற்காக மனஸ்தாபப்படுகி றேன், நான் அறிக்கை செய்து, இப்போதும் நீர் என்னை ஏற்றுக் கொள்வீரானால் நான் இனி ஒரு போதும் திருடமாட்டேன் என்று உமக்கு வாக்கு கொடுக் கிறேன். நான் பலியிடப்படுவதற்காகவும், என் மரணத்திற்காகவும் இவ்வாட்டுக் குட்டி என் ஸ்தானத்தில் மரிக்கப்போகிறது" என்று கூறினான். 95. அதன் பிறகு அவர்கள் அந்தப் பெரிய ஈட்டியை எடுத்து அதன் சிறிய குரல்வளையின் கீழாக வைத்து, இவ்விதாக அதை வெட்டி இப்படி அதை தூக்கிப்பிடித்து, அச்சிறிய ஆட்டுக்குட்டி கத்தியது, கத்தியது. இரத்தம் வடிந்து அதின் ரோமம் முழுவதும் பரவி பரிதாபமான தன் சிறிய வாயினால் கத்தியது, கத்தியது, கத்தியது. முதலாவதாக நீங்கள் ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும். அதின் இரத்தம் வெளியேறி, முழுவதுமாக நனைந்து, தன் சிறிய தலையை சாய்த்தது. அது அவ்வளவு தான். 96. பிறகு அம்மனிதன் செய்த அறிக்கையை பதிவேட்டில் எழுதி பெட்டியினுள் இவ்விதமாக வைக்கப்படுகிறது. அவன் அதை ஒரு வருடத்தில் இரண்டாம் விசை செய்வானேயானால் எவ்வாறாயினும் அவன் சாக வேண்டும்; அந்த ஆட்டுக்குட்டியோடு அவன் சாக வேண்டும். 97. இப்போது, எவ்விதத்திலும் எப்படியாயினும் பழைய ஏற்பாட்டில் அது அவ்வாறு இருந்தது. அவன் அறிக்கை செய்து அங்கே திரும்பி சென்ற உடனே, திரும்பிச் சென்று அவன் ஒருவேளை விபச்சாரம் செய்யலாம். ஒருவேளை அவன் ஏதோ ஒரு தவறை செய்திருக்கலாம். இதை விட அதிகமாக...?... அவன் திரும்பவும் வெளியில் சென்று... ஒருவேளை ஒரு மனிதனை கொலை செய்யலாம்.... ஒருவேளை அவன் திரும்பவும் வெளியில் சென்று எவ்விதத்திலும் அவன் உள்ளே வரும்போது என்ன செய்திருந்தானோ அதே காரியத்தை தன் இருதயத்தில் உடையவனாக திரும்பி சென்றான். அவனுக்குள் எவ்வித மாற்றமும் இல்லை; தேவையானது பூர்த்தி செய்யப்பட்டு விட்டது என்பதை நியாயப்பிரமாணத்தின் மூலமும் நியாயப் பிரமாணத்தின் எழுத்தின் மூலம் மாத்திரமே என்பது அவனுக்கு இருந்தது. இப்பொழுது, அதனால் இயலவில்லை. அவனது இருதயத்தை மாற்ற இயலவில்லை. "அது தவறு" என்பதை மாத்திரம் அவன் அறிந்திருந்தான். ஏன் என்றால் அதை அவன் நியாயப்பிரமாணத்தில் வாசித்தான். அவ்வாட்டுக்குட்டி அவன் ஸ்தானத்தில் மரித்தது. இப்பொழுது, இயேசு வந்த போது பாருங்கள், கிறிஸ்துவின் இரத்தம்... சிந்தப்பட்ட இரத்தம் என்னவிதமான இரத்தமாக இருந்தது? ஒரு மனிதனின் ஜீவனுக்காக மிருகத்தின் இரத்தம், மிருகத்தின் ஜீவன் பாவத்தை போக்க முடியாது, முடியாது. 98. இப்போது, இயேசு வந்த போது, அது மானிட ஜீவன் மாத்திரமல்லாமல் அவர் தாமே, தேவனுடைய சொந்த ஜீவனாகவும் இருந்தது. அது தான் அவருடைய இரத்தத்திலும் இருந்தது. 99. இப்பொழுது, நாம் தவறு செய்யும் போது, "ஓ, நான் தவறு செய்துள்ளேன். நான் பாவம் செய்துள்ளேன். நான் தவறாக வாழ்ந்துள்ளேன். நான் தவறு இழைத்துள்ளேன்" என்று நாம் பார்க்கின்றோம். நான் இப்பொழுது பலி பீடத்தண்டை வந்து, விசுவாசத்தினால் அப்பலியைப் பார்த்து இயேசுவின் தலையின் மீது என் கரங்களை வைத்து, "அன்பின் தேவனே, எனது பாவத்தை-யும் நான் பாவி என்பதையும் பாவத்தின் சம்பளம் மரணம் என்பதையும் நான் அறிந்துள்ளேன். நான் தவறு செய்தால், நான் மரிக்க வேண்டும், அவ்வாறு நான் மரித்தால் உமது சமூகத்தில் வரமுடியாது. நான் தண்டிக்கப்பட்டு வேதனையில் நித்திய நித்தியமாக இருப்பேன். ஆகையால் நான் தவறாக இருக்கிறேன், பிதாவே, நான் இவ்விதமாக மரிக்க கூடாது, நான் சரியாக இருக்க விரும்புகிறேன்" என்று கூறுவேன். ஆகையால் நான் எனது கரங்களை அவரது தலையின் மீது வைத்து, என் ஜீவனுக்காக அவரது ஜீவன் எடுக்கப் பட்டது. ஆனால் அதின் காரியம் என்னவென்றால் பலிபீடத்தை விட்டு நான் தூரம் போகும் போது நான் மாற்றப்பட்ட இருதயத்தோடுகூட தூரம் போவேன். பாருங்கள்? 100. முதல் மனிதன் நியாயப்பிரமாணத்தின் கீழாக மிருகத்தின் இரத்தத்தின் கீழ் சென்றான். அது அவனுடைய இருதயத்தை மாற்ற முடியவில்லை. காரணம் என்னவென்றால் மிருகத்தின் ஜீவனை மனித ஜீவனோடு ஒப்பிட முடியாது. மிருகமானது மனித-இரத்தத்தை கொடுக்க இயலாது. மிருகத்தி-னால் அதை செய்ய இயலாது. பாருங்கள்? காரணம் அதனுடைய ஜீவன் வித்தியாசமானது. மிருகத்திற்கு ஒரு ஜீவன் உண்டு. ஆனால் ஒரு ஆத்துமா இல்லை. மிருகமானது ஜீவனோடு இருக்கக்கூடியது. ஆனால் ஒரு ஆத்துமா இல்லை. 101. ஆனால் தேவன் மனிதனில் மேல் ஆத்துமாவை வைத்தார். எனவே பின்பு என் ஆத்துமா... ஆத்துமா என்னவாய் இருக்கிறது? அது ஆவியின் சுபாவமாய் இருக்கிறது. 102. கிறிஸ்துவின் ஆத்துமா விடப்பட்ட பொழுது, பாதாளத்தில் விடப்பட வில்லை. ஆனால் எடுத்துக்கொள்ளப்பட்டது; இரத்தத்தின் மூலம், அவருடைய இரத்தம் சிந்தப்பட்டதின் மூலம் தேவன் அவரை கல்வாரிக்கு எடுத்துச் சென்ற போது அது, சிலுவையில் அவரது இரத்தத்தில் கலந்தது. அவர் அங்கு தொங்கிக்கொண்டு அவரது தலையை சுற்றிலும் இவ்விதமாக முள்முடியோடு கூட அவர் தமது தலையை முன்னும் பின்னுமாக அசைத்த போது இரத்த-மானது கீழே அவருடைய முகத்தில் வடிந்து, அவரது மயிர்கற்றையிலும் தோளின் மீதும் (shoulder) சொட்டு சொட்டாக விழுந்து அறியாத மொழியில், "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்" என்று கதறினார். அங்கு தான் அந்த ஆட்டுக்குட்டி, அந்த ஒன்று. 103. தகுதியில்லாத ஒருவன் சரியாக இருப்பதற்காகவும் அது நான், ஜீவனின் மேல் எனக்கும் உரிமை உண்டு என்பதற்காகவும்; அந்த ஒன்றுமறியாத ஒன்று மரித்தது. நாமும்.... நீங்களும் தகுதியற்றவர்கள். அதற்காகத்தான் ஆட்டுக் குட்டி மரித்தது. இப்போது, நீங்கள் இங்கு வந்து, உங்கள் கரங்களை அவர் மேல் வைத்து, உங்கள் அறிக்கையை செய்து, தேவன் உங்களை ஏற்றுக் கொண்டார் என்பதற்கு ஒரு அடையாளமாக பரிசுத்தாவியுடன் உங்களுக்கு பதிலுரைப்பார், பாருங்கள். ...ஒரே பலியினாலே... (இங்கே தான் அது இருக்கிறது)... ஒரே பலியினாலே இவர் என்றென்றும் பூரணரானார்... 104. அங்கு தான் நீங்கள் இருக்கிறீர்கள். ஆராதிப்பவன் வருஷந்தோறும் ஒரு தொடர் நிகழ்வாக ஒவ்வொரு வருஷமும் வந்து, சென்று விடுகிறான். மேலும், அவனுடைய இருதயத்தில் அதே விருப்பத்துடன் அடுத்த ஆண்டும் வர வேண்டும். ஆனால் அவர் தம்மாலே தாமே ஒரே பலியை செலுத்திய போது ஒவ்வொரு பாவமும் ஒவ்வொரு பாவ விருப்பமும் சகலமும் அம்மனிதனு-டைய இருதயத்திலிருந்து எடுத்துப் போடப்படுகிறது. அவன் தேவனுடைய பார்வையில் பூரணமானவனாக நிலை நிற்கிறான். அது அவன் என்ன செய்தான் என்பதின் மேல் அல்ல, இயேசு அவனுக்காக என்ன செய்தார் என்பதின் மேல் இருக்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பலியை அவன் ஏற்றுக்கொண்டான். ஓ, எப்பேர்ப்பட்ட ஆச்சரியமான காரியம், நண்பனே. 105. "ஆதலால்...." இப்போது 19-வது வசனம். நமக்கு இன்னும் 20-நிமிடங்களே உள்ளது, நாம் அவை அனைத்தையும் வேதவசனங்களோடு பொருத்துவோ-மாக. இப்பொழுது 19 - வது வசனம். ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவின் இரத்தத்தினாலே நமக்கு தைரியம் உண்டாயிருக்கிறது.... 106. கவனியுங்கள். அது இங்குள்ளது. இப்பொழுது மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பது... அங்கே ஒரு பரிசுத்த ஸ்தலம் பின்பு மகா பரிசுத்த ஸ்தலமும் இருந்தது. "மகா பரிசுத்த ஸ்தலம்" என்று அது அழைக்கப்பட்டது. பிரதான ஆசாரியன் வருடத்தில் ஒரு முறை பிரவேசிப்பான். அவன் அவ்விதம் செய்யும் போது முதலாவதாக அவன் தன்னை பரிசுத்தம் செய்து கொள்ள வேண்டும். உடன்படிக்கை பெட்டி திரைக்கு பின்புறம் இருக்கும். 107. பிரதான ஆசாரியனானவன் சாரோனின் ரோஜாவிலிருந்து தயாரிக்கப்பட்ட நறுமணத்தினால் அபிஷேகிக்கப்பட வேண்டும். வேறு நறுமணத்தினால் அல்ல. இயேசு சாரோனின்-ரோஜா என்று அழைக்கப்பட்டார் என்று உங்களுக்குத் தெரியுமா? ரோஜா என்றால் என்ன? நறுமணம் எங்கிருந்து வருகிறது. ரோஜாவிலிருந்து தான். எங்கிருந்து... 108. இயேசு பள்ளத்தாக்கின் லீலி என்று அழைக்கப்பட்டார். அது சரிதானே? (சபையோர், "ஆமென்" என்கின்றனர் - ஆசிரியர்.) 109. ஒப்பியம் (Opium) எங்கிருந்து வருகிறது என்று யாருக்காகிலும் தெரியுமா? லீலி மலரிலிருந்து. ஒப்பியமானது லீலி மலரிலிருந்து எடுக்கப்படுகிறது. ஒப்பியம் என்ன செய்கிறது? ஒப்பியமானது வலியை இலகுவாக்குகிறது. ஜனங்கள் வியாதியோடும் மிகப் பெரிய வேதனையோடும் அவதியுற்று அவர்கள் சிந்திக்கும் தன்மையை இழந்து பைத்தியம் பிடித்து விடும்போது அவர்களுக்கு மருத்துவருடைய அறிவுரையின் அளவின்படி ஒப்பியத்தை அவர்கள் கொடுக்கும் போது அது சுகமாக்கப்படுகிறது. அது இயற்கையில் அப்படி இருக்கிறது. 110. ஆவிக்குரிய பிரகாரம் இயேசுவானவர் பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமாக இருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு நிலைமைக்கு நீங்கள் ஆளாகும் போது உங்களால் அங்கு இனிமேலும் நிற்க முடியாமலும், வாழ்க்கை என்பது உங்களுக்கு ஒன்றுமில்லாத ஒன்றாக ஆவிடுகிறது. உங்களுடைய எல்லா தொல்லைகளும் சகலமும் நீங்கிப்போய் விடுவதற்காக தேவன் உங்களுக்காக பள்ளத்தாக்கின் லீலி மலரிலிருந்து எடுக்கப்பட்ட மருத்துவரின் அறிவுரையின் அளவின்படியான ஒப்பியத்தை வைத்துள்ளார். நீங்கள் தொல்லையிலிருந்து வெளிவர நீங்கள் மதுபானம் அருந்த வேண்டியதில்லை; அவைகள் திரும்பவும் (வேதனைகளை தீர்க்கதரிசி இங்கு குறிப்பிடுகிறார் - தமிழாக்கியோன்) உடனே வந்து விடுகிறது. ஆனால் பள்ளத்தாக்கின் லீலி புஷ்பத்திலிருந்து எடுக்கப் பட்ட ஒப்பியத்தை குடித்தால் அது நிரந்தரமாக நின்று விடுகிறது. 111. என்ன வந்தாலும் என்ன போனாலும் நீங்கள் ஜீவித்தாலும் மரித்தாலும் அதுவோ அல்லது இதுவோ அல்லது வேறு எதுவானாலும் கிறிஸ்துவுக்குள் இருக்கிற தேவனுடைய அன்பை விட்டு உங்களை எதுவுமே பிரிக்க முடியாது. கிறிஸ்தவர்களுக்கு இலகுவான மலர் படுக்கை, வாக்குத்தத்தம் பண்ணப்படாமல் ஒவ்வொரு தேவைக்கும் கிருபை போதுமானது என்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளது. ஆமென். நான் விசுவாசிக்கிறேன். நான் இப்பொழுது பக்தி பரவசப்படுகிறேன். அதைக்குறித்து சிந்தித்துப் பாருங்கள். ஆம், ஐயா. நான் சோர்வுற்று வியப்புறும் போது இது நடக்கிறது அது நடக்கிறது என்று நான் இங்கு பார்க்கும் போது, ஆனால் நான், "ஒரு நிமிடம் பொறு. என்னே, என்னே!" என்று நினைப்பேன். பாருங்கள், அங்கே ஓர் பள்ளத்தாக்கின் லீலிபுஷ்பம் இருக்கிறது. 112. இப்போது அந்த வாசனை என்ன செய்கிறது? மனதிற்கு இன்பம் அளிக்க பெண்கள் தங்கள் மீது நறுமணத்தை பூசிக் கொள்கின்றனர். ஒரு மனிதன் சவரம் செய்த பிறகு சில சமயங்களில் நாற்றத்தை போக்கிக் கொள்ள அது போல ஏதோவொன்றை பூசிக் கொள்கின்றான். நீங்கள் சிலர் முன்பாக உடல் நாற்றத்தோடு அல்லது அப்படிப்பட்ட ஏதோவொன்றோடு செல்லும் போது நறுமணமானது நாற்றத்தை அப்புறப்படுத்துகிறது. ஆகையால் மற்றவர் முன் இருக்கும் போது நீங்கள் நாற்றமுடையவர்களாய் இருக்கலாகாது. அதை சகித்துக் கொள்ள முடியாது. எனவே தான் நறுமணம் அல்லது.... சவுக்காரத்தில் நாற்றத்தை அப்புறப்படுத்தும் தன்மை உண்டு. ஆகையால் நீங்கள் சவுக்காரத்தினால் கையை கழுவும் போதோ அல்லது நறுமணத்தூள் அல்லது ஏதோ ஒன்றை அவர்கள் பயன்படுத்துகின்றனர். 113. இப்போது கவனியுங்கள். ஆமென். நான் நன்றாக உணர்கிறேன். பாருங்கள். இயேசு சொன்னார்... பாருங்கள். அவர் சாரோனின் ரோஜாவாக தேவனுக்கு தன்னை சுகந்த வாசனையாக ஒப்புக் கொடுத்தார். இந்த.... பின்பு நாம் தேவனுக்கு முன்பாக சகிக்க கூடாதவர்களாக இருந்த போது மிகவும் நாற்றமடிக்கக் கூடியவர்களாக (இப்படி கூறுவதற்காக என்னை மன்னியுங்கள்.) பாருங்கள். நமது பாவங்களும் மற்றவைகளும் மிக மோசமாகவும் பொல்லாத நாற்றமுடையதாகவும் இருந்தது. பின்பு நாம் கல்வாரிக்கு வந்து அங்கு..... 114. ஒரு லீலி மலரோ வேறெந்த மலரோ நறுமணம் தயாரிக்கப்படுவதற்கு முன்பு.... ஒரு மலரை எடுத்துக் கொள்ளுங்கள். அது அழகாக இருக்கிறது; ஒரு பெரிய விடியற்காலத்து லீலி மலரையோ அல்லது ரோஜா மலரையோ எடுத்துக் கொள்ளுங்கள். அழகாக இருக்கிறது. சாரோனின் ரோஜா மலர் அழகான மலர். அது ஜீவிக்கும் போது அது அழகாக இருக்கிறது. அதிலிருந்து நறுமணம் எடுப்பதற்காகவும் வாசனை திரவியம் எடுப்பதற்காகவும் அது பிழியப்பட வேண்டும். அவர்கள் அதை பிழிந்து நசுக்கி அதிலிருந்து நறு மணத்தை பெறுகின்றனர். 115. நீங்கள் பாருங்கள், கிறிஸ்து, அவர் இப்பூமியின் மேல் இப்பூமியிலிருந்த போது அவர் அழகுள்ளவராக இருந்தார். அவர் வியாதியஸ்தரை சுகப்படுத்-தினார். மரித்தோரை உயிரோடு எழுப்பினார். அவருடைய ஜீவியம் ஒரு போதும் ஒப்பிட்டு காண்பிக்க முடியாதிருந்தது. அவர் அழகுள்ளவராக இருந்தார். ஆனால் உங்களையும் அவரைப் போல மாற்றுவதற்கு... தேவன் கீழே பார்த்த போது, "இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் நான் பிரியமாய் இருக்கிறேன்" என்று கூறினார். "உங்களுடைய பலிகள் என் மூக்கிற்கு கீழாக துர்நாற்றம் வீசுகிறது, ஆனால் இது நான் இவரில் பிரியமாக இருக்கிறேன். இப்போது, அவர் பிரியமாக இருந்தார்" என்றார். 116. தேவனுக்கு நாம் பிரியமானவர்களாய் இருப்பதற்கு அவர் கல்வாரியில் பிழியப்பட வேண்டியதாய் இருந்தது. இப்பிரபஞ்சத்தின் பாவமானது அவரில் இருந்து ஜீவனை கசக்கி வெளியேற்றியது. நாம் சாரோனின் ரோஜாவால் அபிஷேகம் பண்ணப்படும் பொருட்டு உலகத்தின் பாவங்களை சுமந்து அவர் மரித்தார். அவர் பள்ளத்தாக்கின் லீலி புஷ்பம். ஒரு சுகந்த வாசனையாக அவர், "நம்முடைய மீறுதல்களுக்காக அவர் காயப்பட்டார்.'' "அவருடைய தழும்புகளால் குணமானோம்." ஒப்பியத்தைக் கொடுக்கும் அந்த பள்ளத்-தாக்கின் லீலி புஷ்பமானது நம்முடைய வியாதிகளையும் வலிகளையும் இலகுவாக்கியது. எவ்வளவு அற்புதமான ஒரு காட்சி! 117. இப்போது பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் அவன் செல்வதற்கு முன், முதல் காரியமாக அவன் குறிப்பிட்ட விதத்தில் ஆயத்தம் செய்த வஸ்திரத்தை அவன் அணிந்து கொள்ள வேண்டும். அதை யார் வேண்டுமானாலும் செய்துவிட முடியாது; அது பரிசுத்த கரங்களினால்தான் செய்யப்பட வேண்டும். அது நம்முடைய வஸ்திரங்களை காண்பிக்கிறது..... 118. அது இங்கே இருக்கிறது. நான்.... இப்பொழுது அது என் நினைவுக்கு வருகிறது. சகோதரனே, நீங்கள் உங்கள் சபை வஸ்திரத்தை மாத்திரமே அறிந்து இருப்பீர்களானால் அதிலிருந்து நீங்கள் விலகி இருப்பது நல்லது; நீங்கள் பின்னால் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு செல்ல முடியாது. இங்கு பிரதான ஆசாரியன் அணிந்து கொள்ளக்கூடிய வஸ்திரமானது தேவனால் நியமிக்கப்பட்ட பரிசுத்தமான கரங்களினாலும் தெரிந்து கொள்ளப்பட்ட பொருட்களைக் கொண்டும் செய்யப்பட வேண்டும். ஆமென். அங்கு தான் அது இருக்கிறது. எனவே நீங்கள் சபையை சேர்ந்து கொண்டு நீங்கள் சரியாக இருப்பதாக எண்ணிக் கொண்டால் நீங்கள் தவறாக இருக்கிறீர்கள். பார்த்தீர்களா? அது தேவனால் தெரிந்தெடுத்த வஸ்திரமாக இருக்க வேண்டும். நம்முடைய சுயநீதியான கந்தைகள் அவருடைய சமூகத்தில் நிலை நிற்க முடியாது. அது பரிசுத்த ஆவியை எடுத்துக் கொள்கிறது. அது தேவனுடைய வஸ்திரமாக விசுவாசிக்கு உடுத்துவிக்கப்பட்டு, பின்னால் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் கொண்டு செல்கிறது. ஓ, அது நல்லது. நான் அதை விரும்பு-கிறேன். அது புதிதான ஒன்று. முன் போல, இதை ஒரு போதும் ஒதுக்கி வைத்துவிட முடியாத ஒன்று. ஆனால் அது தான் அது. அந்தவிதமான, அது மெய்யான ஊட்டச்சத்தாக அது இருக்கிறது. பாருங்கள், அந்த பரிசுத்த ஆவியை - அது எடுத்துக் கொள்கிறது. 119. அந்த உவமையில் இருப்பதை கவனியுங்கள்... கல்யாண விருந்திற்கு செல்பவர்கள் ஒவ்வொருவரும் கல்யாண விருந்தில் ஒரு குறிப்பிட்ட வஸ்திரத்தை அணிந்திருத்தல் வேண்டும். அவன் அவ்வாறு வஸ்திரம் அணிந்திராத ஒரு மனிதனை சந்தித்தான். "நண்பனே, நீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்? நீ எவ்வாறு உட்பிரவேசித்தாய்?" என்று கேட்டான். இப்போது பாருங்கள். உவமையை அறிந்திருப்பீர்களானால் கிழக்கத்திய நாடுகளில் கிழக்கத்திய நாடுகளை சார்ந்தோர் திருமணம் செய்து கொள்ளும் போது மணவாளன் தனக்கு விருப்பமானவர்களை அழைக்க வேண்டும். இன்றும் அவ்வாறு தான். 120. மேலும் தேவனால் முடியும்.... "தேவன் ஒருவனை முதலில் அழைக்காமல், அம்மனிதன் தேவனிடமோ அல்லது கிறிஸ்துவினிடமோ வரமுடியாது." பாருங்கள். அது தேவனுடைய தெரிந்து கொள்ளுதல். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். 121. பிறகு மணவாளன் அழைப்பிதழை கொடுத்திருப்பாரானால், அவர் வஸ்திரத்தையும் கொடுக்க வேண்டும். வேறு எந்த மனிதனும்... ஏனெனில் அவன் ஏழையையும் ஐசுவரியவானையும் அழைக்கின்றான். ஆனால் ஒவ்வொருவரும் பார்ப்பதற்கு ஒரே விதமாக இருப்பதற்கு அவன் ஏழைக்கு வைத்திருப்பது போலவே ஐசுவரியவானுக்கும் வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் விளங்கிக்கொண்டீர்களா? (சபையார், "ஆமென்" என்கின்றனர்- ஆசிரியர்.) 122. இப்போது தேவன் ஒரு ஏழைக்கு பரிசுத்தாவியை அருளும் அதே விதமாகத்தான் அவர் ஐசுவரியவானுக்கும் பரிசுத்தாவியை அருளுகிறார். பாருங்கள், அவர்கள் அனைவரும் ஒரே விதமாகத்தான் இருக்க வேண்டும். அவர்கள் தேவ சமூகத்திற்கு வரும் போது, "நான் சிறந்ததை அணிந்து இருக்கிறேன்" என்று எவனும் சொல்லக்கூடாது. ஏனென்றால் அது ஒரே இரத்தமாக இருக்கிறது. அதே கிருபை, அதே பரிசுத்தாவி உங்களை ஒரே விதத்தில் கிரியை செய்ய வைக்கிறது. ஐசுவரியவானும் ஏழையும் ஒரே விதமாக வரவேண்டும். அது தான் மிகச்சரியான உவமை. கவனியுங்கள். 123. அதன் பிறகு அழைப்பிதழோடு அவர்கள் வரும் போது, அவர்கள்... வஸ்திரங்கள் வாசலில் கொடுக்கப்படுகிறது. வாசலில் நிற்கும் மனிதனிடம் அவன் வந்து தன்னுடைய அழைப்பிதழை கொடுத்து காண்பிக்க வேண்டும். இந்தியாவில் அவர்கள் இப்போதும் அவ்வாறு தான் செய்கின்றனர். அவ்வாறு திருமணத்திற்கு வருகின்றனர். அங்கே வாயிற்காவலர்(porter's) வாசலில் நின்று கொண்டிருக்கின்றனர். அந்த வீட்டாரிடம் நீங்கள் உங்கள் அழைப்பிதழை கொடுக்கிறீர்கள். "ஆம், ஐயா" அவர்கள் அவ்விடத்தை அடைந்து ஒரு வஸ்திரத்தைப் பெற்றுக் கொண்டு, இவ்விதமாக ஒரு வஸ்திரம், அதை அணிந்து கொள்கின்றனர். அவன் உள்ளே நடக்கிறான். அவன் அதிகாரப் பூர்வமாக அழைக்கப்பட்டுள்ளான் என்பதை அது காண்பிக்கிறது. அவன் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறான். இப்போது அவன் ஒரு அங்கத்தினன். ஆமென். அங்கு தான் நீங்கள் இருக்கின்றீர்கள். 124. இப்போது, பிதாவாகிய தேவன், பரிசுத்த ஆவியானவர் புறப்பட்டு போய் கல்யாண விருந்திற்கு ஓர் அழைப்பிதழை உங்களுக்கு கொடுக்கிறார். பாருங்கள்? இப்போது, அது மணவாளனை பொறுத்தது. பிறகு வஸ்திரங்களை கொடுக்கிறார். அவர் தமது சொந்த ஜீவனை கொண்டு அதை செய்து அந்த பரிசுத்தாவியை அவர் தந்தார். உங்கள் அழைப்பிதழோடு நீங்கள் வந்து வாசலண்டை நிற்கிறீர்கள். ஆமென். "நானே ஆடுகளுக்கு வாசல்" என்று இயேசு சொன்னார். நீங்கள் இயேசுவின் நாமத்தின் மூலமாக வரும் போது நீங்கள் பரிசுத்தாவியைப் பெற்றுக்கொள்கிறீர்கள். அது சரி தானே? பரிசுத்தாவி-யைப் பெற்ற பிறகு நீங்கள் உட்பிரவேசித்து நீங்கள் ஒரு அங்கத்தினர் ஆகின்றீர்கள். தேவனுடைய குடும்பத்தில் ஓர் அங்கத்தினர். ஓர் அங்கத்தினர்-! 125. "ஒரு அங்கத்தினன் என்றா நீங்கள் சொல்கிறீர்கள்?" நிச்சயமாக. "நான் ஒரு வேலைக்காரனாக முடியுமா?" இல்லை, உங்களால் முடியாது. 126. நீங்கள் ஒரு அங்கத்தினராகின்றீர்கள். வேலைக்காரர்கள் அல்ல. நீங்கள் குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறீர்கள். நாம் இப்போது தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாகவும் தேவனுடைய குடும்பத்தின் அங்கத்தின-னாகவும் இருக்கின்றோம். என்னே, ஓ, என்னே-! நான் ஒரு மரவீட்டில் வசிக்கலாம். ஆனால் நானோ இராஜரீக இரத்தமாக இருக்கிறேன். அங்கே தான் நீங்கள் இருக்கின்றீர்கள். "தேவனுடைய வீட்டாரோடு நீங்களும் அங்கத்தினர்.' அது தான் வேதவசனம். வேதவசனம் அப்படித்தான் கூறுகிறது. "நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரியதென்று பாருங்கள்." (1 யோவான் 3:1.) ஓ, என்னே! அங்கே தான் அந்த அங்கத்தினர் உள்ளனர். 127. இப்போது பிரதான ஆசாரியன் அபிஷேகிக்கப்பட்டு உட்பிரவேசிக்கிறான். மிருகத்தின் இரத்தத்தை தன்னோடு கூட அவன் எடுத்து செல்ல வேண்டும். இல்லையென்றால் அவன் மரித்து விடுவான். 128. அவனுடைய வஸ்திரத்தை பற்றி இன்னொரு காரியம். அவன் வஸ்திரத்தின் கீழ் ஓரத்தில் என்ன உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா? வஸ்திரத்தின் கீழ் ஓரத்தில் என்ன இருக்கிறது என்று எப்போதாவது பார்த்து இருக்கிறீர்களா? அவனது வஸ்திரத்தின் கீழ் ஓரத்தில் ஏதோ ஒன்று உள்ளது. ஒவ்வொரு... அவனது வஸ்திர ஓரத்தின் முனையில் சிறிதாக ஒன்று தொங்கிக் கொண்டிருக்கிறது. அது ஒரு மாதுளையும் ஒரு மணியுமாக இருக்கிறது. ஒரு மாதுளையும் மணியும். 129. அவன் உட்பிரவேசிக்கும் போது ஒரு குறிப்பட்ட விதத்தில் தான் அவன் நடந்து போக வேண்டும். அவன் தான் உண்டு பண்ணிக் கொண்ட எந்த வழியிலும் செல்லக் கூடாது. அவன் ஒரு குறிப்பிட்ட வழியில் தான் நடக்க வேண்டும். அவன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும்போது மணிகள் ஓசை எழுப்பி மாதுளை பழத்தின் மீது படவேண்டும். "பரிசுத்தம், பரிசுத்தம், கர்த்தருக்கு பரிசுத்தம்." பிறகு கர்த்தர், அவன் அணுகி வரும் போது அவனை கேட்டருள்வார். ஆமென். அல்லேலூயா! 130. அங்கே தான் அது இருக்கிறது. நீங்கள் உங்களுடைய இருதயத்தில் "பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்" என்று கதறிக் கொண்டு தேவனால் அருளப்பட்ட வழியில் நீங்கள் அணுகி நீங்கள் வருவீர்களானால் தேவன் உங்களை கேட்டருள்வார். அங்கே நீங்கள் பிரவேசித்தும், பரிசுத்தாவியானவரை தேடிக்கொண்டு வருவதாக இருந்தாலும். பார்த்தீர்களா? "பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்." 131. பின்பு சபையோர் அறிந்திருந்த ஒரே வழி... இப்போது, அவன் சரியான விதத்தில் வஸ்திரம் அணியாமல் உள்ளே பிரவேசித்து இருப்பானேயானால், அவன் வாசலுக்கு உள்ளேயே சாக வேண்டும். அவன் இனி ஒரு போதும் வெளியே வர முடியாது. அவன் வஸ்திரம் அணியாமலும் அபிஷேகம் இல்லாமலும் உட்பிரவேசித்திருப்பானேயானால் அவன் அங்கேயே செத்து விடுவான். இப்போது அவன் சரியாக இருந்தானா தவறாக இருந்தானா என்று சபையார் அறிந்திருந்த ஒரே வழி... ஓ, என்னே! பிரதான ஆசாரியன் சரியாக இருந்தானா தவறாக இருந்தானா என்று காத்துக்கொண்டிருக்கும் சபையார் அறிந்திருந்த ஒரே வழி, அந்த மணிகளின் சத்தத்தை கேட்பதன் மூலம் மாத்திரமே. அதில் ஒரு சத்தம் இருந்தது. அந்த வழியில் தான் அவன் சரியாக இருந்தானா தவறாக இருந்தானா என்று அவர்கள் அறிந்து கொண்டனர். 132. அதே காரியம் இன்றும் கிரியை செய்யுமானால் நான் ஆச்சரியப்படுகிறேன். நீங்கள் ஒரு சபைக்கு செல்வீர்களானால் சகலமும் மரித்தும் அசைவற்றும் இருக்கிறது. எனக்குத் தெரியாது. ஆனால் அவன் ஒரு சத்தம் உண்டாக்கி உங்களுக்குத் தெரியும், தேவன் இன்னும் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார் என்று ஜனங்கள் அறிந்து கொள்ளுமாறு செய்கிறான். தேவன் ஜெபங்களுக்கு பதிலளிக்கிறார், ஜனங்களுக்கு இன்னும் பரிசுத்தாவி இருக்கிறது; தேவனுடைய துதிகளை சத்தமிட்டு ஆர்ப்பரித்து, தேவனை மகிமைப்படுத்துகின்றனர், "நல்லது, அவர் இங்கு தான் சுற்றிலும் இருக்கிறார். இது ஜீவன் இருக்கும் ஸ்தலம்" என்று சபையோர் கூறுவார்கள். நாம் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசித்து கிறிஸ்தவர்களாக இருப்பதற்கு உரிமை-கோரி அங்கே சில சத்தத்தை உருவாக்க வேண்டும். மிகுந்த புத்தியீன-மானவைகள் என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. நான் கூறியது சில உண்மையான சத்தம். அது சரி. இப்போது இங்கு கவனிப்போம். ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசு- வானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை... (பழைய நியாயப்பிரமாணமல்ல.... அவர் ஒப்புரவாக்கினபோது... நமக்கு உண்டு பண்ணினபடியால், அந்த மார்க்கத்தின் வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்கு தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், தேவனுடைய வீட்டின மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்-தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவு இல்லாமல் உறுதியாய் இருக்கக்கடவோம்; (வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே;) (எபிரேயர் 10:19-23) 133. அது அப்படியே சகலத்தையும் எடுத்து புறம்பாக்குகிறது. ஓ, என்னே! நான் அதை விரும்புகிறேன். ஆனால் நான் முடிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் நீங்கள் தேவனுக்கு முன்பாக நடக்கும்போது "நல்லது, இப்போது சகலமும் சரியாக இருக்குமானால் நான் வியப்படைகிறேன். நான் - நான்..." என்று நாம் கூறிக் கொண்டு போகக் கூடாது. நீங்கள் ஒரு கிறிஸ்தவரா? "நல்லது, நான்- நானும் தான் என்று நம்புகிறேன்.'' அந்த வழியில் வரக்கூடாது. 134. சகோதரனே, கதையை விசுவாசித்து, ஏற்றுக் கொண்டு மறுபடியும் பிறந்தவர்களாக இருங்கள். அதன் பிறகு, தேவன் வாக்குத்தத்தம் செய்து இருக்கிறார், தேவன் பொய்யுரையாதவர் என்று அதை அறிந்து தூய விசுவாசத்தோடு நடந்து, நான் அவருடைய குமாரன், இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால் எனக்கு நித்திய ஜீவனை தருவதாக வாக்களித்துள்ளார். நான் அதை விசுவாசிக்கிறேன்; அவரெனக்கு நித்திய-ஜீவனை தந்துருளியிருக்கிறார்." 135. நான் அநேக தவறுகளை செய்துள்ளேன், இன்னும் அவைகளை செய்து கொண்டிருக்கிறேன். இனி எப்போதும் அவைகளை செய்வேன். ஆனால் நான், அவைகளை செய்யும் போது, அந்த பரிசுத்தாவியானவர் அவைகள் தவறு என்று சொல்லுகிறார். பின்பு நான் உடனே மனந்திரும்பி, "கர்த்தாவே, என்னை மன்னியும். அப்படி செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. இப்போதும் எனக்குதவி செய்யும்" என்று அது என் உதடுகளிலிருந்து போனவுடன், அதே காரியத்தில் நான் சரியாக நடக்கிறேன். ஏனென்றால், "நாம் நம்முடைய பாவங்களை அறிக்கை செய்வோமானால், அவைகளை மன்னிக்க அவர் நீதியுள்ளவராயிருக்கிறார்" அது சரியா? (சபையோர், "ஆமென்" - ஆசிரியர்.) அல்லேலூயா! 136. பிசாசு, "என்ன என்று உனக்குத் தெரியுமா? நான் உனக்கு சொல்லுகிறேன். ஒருக்கால் நீ ஒரு குறிப்பிட்டதை செய்யப் போவீர்களானால், நீ அதை செய்யக் கூடாதே, ஊ-ஹீ, நீ பாவம் செய்தாய். நீ அதை செய்தாய் அல்லவா?" என்பான். நான் சொல்கிறேன், "நான் அதை அறிக்கை செய்து விட்டேன்" என்று. "நல்லது, நான் உனக்கு சொல்லுகிறேன்..." 137. "இல்லை, என்னுடன் பேசாதே. இல்லை ஐயா. என்னிடத்தில் சொன்னவர் மேல் எனக்கு பூரண விசுவாசம் இருக்கிறது. என் தவறுகளை நான் அறிக்கை செய்வேனென்றால் அவர் என்னை மன்னிப்பார். ஆகையால் நான் அதை அறிக்கையிட்டேன். அப்படியே என்னிடமிருந்து போய்விடு. எப்படியாயினும் உன்னைப்பற்றி எனக்கு எந்த அக்கரையும் கிடையாது, போய்க்கொண்டேயிரு." 138. அவ்வறிக்கையில் தைரியமாக நடந்து செல்லுங்கள், அங்கே மரணம் இருக்குமானால், எல்லாம் சரி. "கடைசி நாளில் நான் உன்னை எழுப்புவேன்" என்று தேவன் அளித்துள்ள அந்த வாக்குறுதியின் மேல் பூரண விசுவாசத் தோடு அதில் பிரவேசியுங்கள்." ஆம், ஐயா. 139. நான் உங்களிடத்தில் கூறினவிதமாக; நான் உங்களிடத்தில் இதை கூறி இருக்கின்றேனா இல்லையா என்று எனக்குத் தெரியாது.... நான் வெளிநாடு-களுக்கு செல்வதற்கு முன், இங்கே சில நாட்களுக்கு முன்பு நான் நின்று கொண்டிருந்தேன், அனேகமாக ஜீனும் நானும் செய்கிறதை நீங்கள் கூறியதைப் போல நான் தலைவார முயற்சித்தேன் என்ன, ஒரு மயிர் விழுந்தது. மனைவி என்னைப் பார்த்து, "அன்பே! ஹூம்!" "கலிபோர்னியாவில் அங்கு அவர்கள் கொடுத்த, தலையில் வைத்துக்கொள்ளும் செயற்கை முடியை நீங்கள் அணிந்து கொள்வது நல்லது" என்று கூறினாள். 140. "அன்பே, நான் உண்மையாகவே அதை நன்றாக விரும்புகிறேன். ஆனால் சற்று வெட்கமாயுள்ளது" என்று கூறினேன். 141. "என்னே , பில், நீங்கள் நிச்சயம் உங்களுடையதை எடுத்து... உங்களுடைய மயிர் மெய்யாகவே கொட்டி விட்டது" என்றாள். 142. "ஆம், அது சரி. ஆனால் ஓ, அல்லேலூயா!" என்று கூறினேன். "எதற்காக நீங்கள் அல்லேலூயா என்று கூறுகின்றீர்கள்?" என்றாள் அவள். "நான் ஒருபோதும் ஒன்றையும் இழக்கவில்லை" என்றேன் நான். "நீங்கள் ஒருபோதும் ஒன்றையும் இழந்துபோகவில்லையா?" என்று அவள் கூறினாள். 143. நான், "இல்லை" என்று கூறினேன். நான், "பார் அன்பே, எனக்கு வயது ஆகிறது" என்றேன். நான், "எனக்கு நாற்பத்தைந்து வயது" என்றேன். நான் கூறினேன், "நான் ஒரு வயதான மனிதன்" என்று கூறினேன், "இல்லையா..... எனக்கு வயதாகிறது. எனக்கு வழுக்கை தலையோ வேறு எதுவோ, எனக்கு எந்த வித்தியாசத்தையும் உண்டாக்கிக் கொள்வதில்லை. நான் வெளியில் போகாத வரையிலும் எனக்கு பிரச்சனை இல்லை - கடும் குளிரையும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறேன். ஆம்" என்று கூறினேன். 144. மேலும் அவள், "நல்லது..." என்றாள். நான் கூறினேன்... ஆனால் அவள், "நல்லது நீங்கள் எங்கே... ஆனால் உங்கள் மயிர்கள் போகவில்லை என்று கூறினீர்கள்" என்றாள். 145. நான் கூறினேன், "அவைகள் போய்விடவில்லை" ஏன். "உங்கள் தலையில் உள்ள மயிர் ஒன்று கூட அழிந்து போகாது என்று இயேசு கூறினார்" என்று நான் கூறினேன். பாருங்கள், பாருங்கள்? அவள், "நல்லது, நீங்கள் குறிப்பிட்டது..." என்றாள். 146. நான், "அன்பே, உயிர்த்தெழுதலில் நான் வரும்போது நாம் விவாகம் செய்து கொண்ட போது இருந்ததை போல நேரான தோள்கள், ஒரு சுருக்கமும் இல்லாமல், நீண்ட கருத்த மயிர்களுடன் வாலிபனை போல இருப்பேன். அவ்விதமாக நான் திரும்பவும் காணப்படுவேன். ஆம், ஐயா. நான் ஒருபோதும் அவைகளை இழக்கவில்லை" என்று கூறினேன். அவள், "நல்லது, நல்லது, அவைகள் இப்போது எங்குள்ளது" என்றாள். 147. நான், "நான் உன்னை ஒன்று கேட்கிறேன். பிறகு நீ எனக்கு பதிலளித்தால், நான் உனக்கு பதிலளிப்பேன்" என்றேன். அவள், "என்ன?" என்றாள். நான், "நான் அவைகளை பெற்றுக்கொள்வதற்கு முன் அவைகள் எங்கு இருந்தன?" என்றேன். அவள், "நல்லது, தேவனிடம் என்று நான் நினைக்கிறேன்" என்றாள். 148. நான், "அவைகளும் கூட அங்கே தான் அவரிடத்தில் இருக்கின்றன. அவைகள் இன்னும் அங்கு தான் இருக்கின்றன. அவைகளுக்குள் இருக்கும் ஒவ்வொரு ஊட்டச்சத்தும், அவைகளுக்குள் இருக்கும் ஒவ்வொரு உயிர் அணுவும், அவைகளுக்குள் இருக்கும் ஒவ்வொரு அணுவும், அவைகளுக்குள் இருக்கும் ஒவ்வொரு பெட்ரோலிய துகள்களும் அவைகள் உருவாக எடுத்துக் கொண்ட ஒவ்வொரு ஒளித்துகள்களும், தேவன் அவைகளை தமது கரங்களில் உடையவராக இருக்கிறார். அவைகளில் ஒன்றும் அழிந்து விடவில்லை. அவைகள் அனைத்தும் எங்கோ தேவனுடைய கரங்களில் உள்ளது" என்றேன். 149. என் கண்கள் கீழாக தொங்கி விடுவதையும், கீழாக பை போன்ற ஒன்றும் நெற்றியில் பெரிய சுருக்கங்களையும் நான் பார்க்கிறேன். சில சமயங்களில் எனது வேதாகமத்தை பார்ப்பதற்கு என் கண்களை அனேகமாக குறுக்கி பார்க்க வேண்டியுள்ளது. பார்க்கும் திறன் பூரணமாக அதாவது 20/20 இருப்பதாகவும் ஆனால் "நீங்கள் நாற்பது வயதை கடந்தபிறகு உங்களுடைய கருவிழியானது தட்டையாகி உங்களால் நெருக்கமாக வாசிக்க முடியாது" என்றும் மருத்துவர் என்னிடம் கூறினார். "ஆம், ஐயா. அது எனக்கு தெரியும்" என்று கூறினேன். 150. "நீங்கள் உங்கள் வேதாகமத்தை (படிக்கும் போது அதன் தூரத்தை அதிகப் படுத்துவதை மருத்துவர் கூறுகிறார்-தமிழாக்கியோன்.) தள்ளிக் கொண்டே வேதாகமத்தை தள்ளிக் கொண்டே இருக்க வேண்டும். சில காலத்திற்கு பிறகு உங்களால் படிக்கவே இயலாது" என்றும் கூறினார். 151. "பெரிய எழுத்துக்கள் அல்லது ஏதோ ஒன்றை அதைப் போன்ற ஒன்றை பெற்றுக்கொள்வேன்" என்று கூறினேன். "நல்லது, அது இயற்கை தான்" என்று கூறினார். 152. "நான் அங்கே வெளியில் பார்த்தேன். தட்டின் (plate) ஓரத்தில் ஒரு முடி கிடந்தது." 153. அவர் கூறினார், "நல்லது, உங்களுக்கு நாற்பது வயதாகின்றது ஐயா.'' "உங்களுடைய-உங்களுடைய கருவிழிகள் உண்மையிலேயே... உங்களுடைய மயிரானது நரைத்து இவ்விதமாக மாறி விடுவதைப் போல. நீங்கள் அதைப் பெற்றிருக்கத்தான் வேண்டும்'' என்றார். (மருத்துவர் கண் கண்ணாடி அணிந்து கொள்ளவேண்டும் என்று கூறுவதை சகோ.பிரான்ஹாம் இங்கு குறிப்பிடுகி றார் - தமிழாக்கியோன்.) "ஊ-ஹீ" என்று நான் கூறினேன். 154. நான் இவைகள் அனைத்தையும் பார்க்கிறேன். என் தோளை (shoulder) கவனித்தேன், முன்னோக்கி வளைந்திருந்தது. நான் இளமையோடும் விளையாட்டு வீரனைப்போலவும் இருப்பது வழக்கம். இப்பொழுது என் உடல் பெருத்துக் கொண்டிருக்கிறது. என் எடையில் நாற்பது பவுண்டு அதிகமாக உள்ளது. என் பாதங்கள் தட்டையாக தொடங்கி நடப்பதற்கு கடினமாக இருக்கிறது. வலிகளும் வேதனைகளும் வருகிறது. நல்லது. எனக்கு வயது ஆகிறது. அவ்வளவு தான். 155. இவை அனைத்தும் எனக்கு வழக்கமாக இருக்கும். கவர்ச்சிக்காக எனக்கு அவசியமில்லை, ஆனால் அவைகளில் ஒன்றையும் நான் இழக்கவில்லை. தோலுக்குள் இருக்கும் ஒவ்வொரு அளவுகளும் என்னை இளமையாக வைத்தது. தேவன் அவைகளை இன்னும் வைத்திருக்கிறார். அது சரி. 156. இந்த பழைய கூடு (old hull), முழுமையாக இழுத்துக்கொண்டு, அவ்வளவு தான். சில நாள் கழித்து, அது பழைமையாகியும் சுருக்கங்கள் ஏற்பட்டும், மற்றுமுள்ள, எனது அம்மாவை சார்ந்த ஹார்வே (harvey) செய்வதை போல அனேகமாக ஆகிவிடும். நான் ஹார்வேயை போலவே இருப்பதாக அவர்கள் கூறுவார்கள். அவர்கள் அனைவருமே சரீரத்தில் கட்டுப்படுத்த முடியாத நடுக்கத்தை உடையவர்கள். இச்சபையை இங்கே கட்டியவர்களில் ஒருவராகிய தாத்தாவை உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நீங்கள் அறிவீர்கள். அவரும் எப்போதும் சரீரத்தில் கட்டுப்படுத்த முடியாத நடுக்கத்தோடு இவ்வாறாக சென்று கொண்டிருக்கிறார். பாருங்கள்? 157. முன்பொரு நாள் ஏழை வயதான தாயாரை நான் கவனித்தேன். அவர்கள் இங்கில்லை என நான் நம்புகிறேன். ஆனால்... ("ஆம் அவர்கள் இங்குள்ளனர்" என்று சபையில் இருக்கும் ஒரு சகோதரி கூறுகிறார் - ஆசிரியர்.) ஓ, இருக்கின்றார்களா என்று எனக்குத் தெரியாது... நல்லது எப்படியோ ஏழை வயதான காரியம், அதைப்போல ஒன்று, அவர்களுடைய வயதான கரங்களில் ஒரு கோப்பை காபியை (coffee) எடுக்க ஆரம்பிப்பார்கள், சுருக்கங்கள் வெளியே தொங்கிக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அதை நன்றாக சொல்ல வேண்டும் என்றால் "ஓ, இரக்கம்!" என்று நினைத்தேன். அவர்கள் அங்கு அமர்ந்துள்ளார்கள், பாருங்கள். "நான் அல்ல..." அவர்களால் அதை எடுக்க இயலும். ஆனால்.... பார்த்தேன்... என் இதயம் எனக்குள் துடித்தது. என் தலையை நான் திருப்பினேன். நான் நினைத்தேன், "தேவனே எத்தனை முறை அது எனக்கு என் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத்தது. இப்பொழுது கட்டுப்படுத்த முடியாத சரீர நடுக்கத்தை உடையவர்களாக இருக்கிறார்கள்!" "ஆம், நானும் ஜீவனோடு இருப்பேனானால் ஒரு நாள் அந்நிலையை அடைவேன்" என்று நினைத்தேன். 158. ஆனால் சகோதரனே, இந்த நாட்கள் ஒன்றில் நான்... இவ்வழியக்கூடிய வாழ்க்கையின் பழைய சக்கரங்கள் அனைத்தும் அசைவற்று நிற்கும் - அது அவ்வாறு சம்பவிக்கும் போது நான் சீயோன் மலைக்கு சென்று அங்கு வாழ்வேன். ஆம், ஐயா. அழிந்து போகக்கூடிய எல்லா பழைய காரியங்கள்-! ஓ, நினைத்துப் பாருங்கள். அவர் கூறினார். ஒரு மகிழ்ச்சிகரமான நாளை எனக்காக காத்திருக்கிறது அங்கு முத்துக்கள் பதிக்கப்பட்ட வாசல்கள் விரிவாய் திறக்கும் இந்த துன்பத்தின் திரையை நான் கடக்கும்போது நான்மறுபுறம் இளைப்பாறுவேன். என்றாகிலும் ஒருநாள் அழிந்து போகக்கூடிய உறவினருக்கு எட்டாத தூரத்தில் என்றாகிலும் ஒருநாள், அது எங்கே எப்பொழுது என்று தேவன் மாத்திரமே அறிவார் அழிந்து போகக்கூடிய வாழ்க்கையின் சக்கரங்கள் சுழலாமல் நின்று போகும்போது நான் சீயோன் மலையில் தங்குவதற்கு சென்று விடுவேன். இனிய ரதம் ஆடி அசைந்து இறங்கும் என்னை வீட்டிற்கு தூக்கிச் செல்ல வருகிறது இனிய ரதம் ஆடி அசைந்து இறங்கும் என்னை வீட்டிற்கு தூக்கிச் செல்ல வருகிறது 159. அது சரி. மூடுபனியானது என் முகத்தின் முன் வீச ஆரம்பித்து, அனேகமாக மருத்துவர் ஓடி வந்து, "நல்லது, பில்லி அவளுக்கு எல்லாம் முடிந்து விட்டது" என்று கூற. ஓ, என்னே! அந்த பெரிய கருப்பு அறை அதோ அங்கிருப்பதையும் இதய துடிப்பானது அதற்குள் செல்கிறது என்பதையும் நான் அறிவேன். நான் ஒரு கோழையைப் போல செல்ல விரும்பவில்லை. நான் அவரை அவருடைய உயிர்த்தெழுந்த வல்லமையில் அறிந்தவனாக இருந்து, நான் அவருடைய நீதியின் வஸ்திரத்தினால் சுற்றப்பட வேண்டும் என்பதை அறிந்தவனாக ஒரு நாளில் அவர் என்னை அழைக்கும் போது, மரித்தோரிலிருந்து வெளியே வந்து மறுபடியும் என்றென்றுமாய் ஜீவிப்பேன். 160. கிறிஸ்துவை அறிந்து கொள்வது ஜீவனை அறிந்து கொள்வதாகும். அது சரியாய் இருக்கிறது. என்னுடைய A,B,C யை நான் அறியாதிருப்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் நான் கிறிஸ்துவை அறிந்து கொள்ள வேண்டும். அது சரியே. நான் இந்த வேதசாஸ்திரங்கள் அனைத்தும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் கிறிஸ்துவை அறிந்து கொள்ள வேண்டும். நான் ஜனாதிபதியையும் அவர் நல்ல மனிதனா அல்லது கெட்ட நபரா என்று அறியாது இருக்கலாம். நான் கிறிஸ்துவை அறிந்து கொள்ள வேண்டும். அது சரியே. கிறிஸ்துவை அறிந்து கொள்வது ஜீவன். அது சரியே. ஜனாதிபதி மற்றும் புகழ் வாய்ந்தவர்கள், திறமைசாலிகள் இன்னும் மற்றதை அறிந்து இருப்பது கௌரவம் வாய்ந்தது. நான் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. நான் கிறிஸ்துவை அவருடைய உயிர்த்தெழுந்த வல்லமையில் அறிய விரும்புகிறேன். இதை நாம் அறிந்தவர்களாக இன்றிரவு, தேவனுடைய மகத்துவ ஆசனத்தின் வலது பாரிசத்தில் உட்கார்ந்து பரிந்து பேசுகிற பிரதான ஆசாரியர் ஒருவர் நமக்கு இருக்கிறார். பின்பு, நான் அதை பகிரங்கமாக கூறுவதில் உறுதியாய் இருக்கிறேன்! 161. (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்..... பாம்பை ஆராதிப்பவர்கள், பசுவை ஆராதிப்பவர்கள், மற்றும் அனைத்தையும். பதினேழு வெவ்வேறு மதத்தினர் முன், "இவ்வுலகத்தின் சமயங்களை சார்ந்த மரியாதைக்குரியவர்களே, இங்கு நின்று கொண்டிருக்கும் பார்வையற்ற இந்த ஏழை மனிதனுக்கு உங்களுடைய மதம் எதை கொடுக்க முடியும்?" என்று நான் கேட்டேன். அங்கே அவன் 20-வருடங்களாக சூரியனை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முழுவதுமாக பார்வையற்றவனாக இருந்தான். "உங்களுடைய மதம் இந்த மனிதனுக்கு என்ன செய்ய முடியும்?" என்று நான் வினவினேன். "என்றாவது ஒருநாளில் முகமது அவனுக்கு கருணை காண்பித்து அவனது ஆத்துமாவை இரட்சிப்பார்" என்று ஒருவேளை நீங்கள் சொல்லலாம். அவன் தனது தலையை இவ்வாறு வைத்துக் கொண்டு அவன் சூரியனைப் பார்த்துக் கொண்டே இருந்தால் அவன் மரிக்கும் போது இரட்சிக்கப்படுவான் என்று புராண நம்பிக்கையூட்டலாமே தவிர இவ்வுலகில் வேறொன்றுமே இல்லை. 162. "அவர் எதையும் கொடுக்க முடியாது" என்று நான் கூறினேன். "ஆனால் இயேசு கிறிஸ்துவின் இரத்தம், அல்லேலூயா, நித்திய ஜீவனைக் கொடுப்பது மாத்திரமல்ல, அவனுக்கு முன்பு இருந்த பார்வையை திரும்பவும் அவனுக்கு கொடுத்து, உங்களுக்கு முன்பாக அதை நிரூபிக்கவும் முடியும். அவன் பார்வையடைந்து செல்வானேயானால் இவ்வுலகின் மதங்களை சார்ந்த மதிப்புக்குரியவர்களே...' என்றேன். அங்கு கூடியிருந்த அனேகமாக இலட்சக் கணக்கான ஜனங்கள் அதைக்கேட்டனர்... அனேகர் அதைக்கேட்பதை என்னால் அதைப் பார்க்க இயலவில்லை. ஏனென்றால் அவ்வளவு மக்களையும் உங்களால் பார்க்க இயலாது. "அவர் அவ்வாறு செய்வாரேயானால் நீங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வீர்களா?" என்று வினவினேன். அவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தினார்கள். அவர்களுடைய கருப்பு கரங்களை மேலே உயர்த்தினார்கள். அவர்கள் அதை செய்வார்கள். "அந்த மதிப்புக்குரிய- வரை அழைத்து வாருங்கள்" என்று கூறினேன். 163. அவர் அங்கே நடந்து மேலே வந்த போது நான் கூறினேன். "ஐயா, நீங்கள் பார்வை இழந்து இருக்கிறீர்கள். இயேசு கிறிஸ்து உங்களுக்கு பார்வையை திரும்ப கொடுப்பாரானால் அவருக்கு நீங்கள் சேவை செய்வீர்கள் என்று வாக்கு கொடுப்பீர்களா?" என்று கேட்டேன். 164. அவர் கூறினார், "நான் இயேசு கிறிஸ்துவை நேசிப்பேன். அவரைத் தவிர வேறு தேவனை வணங்க மாட்டேன். அவர் எனக்கு மீண்டும் பார்வையை கொடுப்பாரானால், அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதை அறிந்து கொள்வேன்.'' 165. என் கரங்களை அவன் மேல் வைத்து, "அன்பின் தேவனே, மானிட கரங்களாக, ஒரு வேலைக்காரனாக, ஒரு பாவம் நிறைந்த மனிதனாக; ஆனால், நீர் பரிசுத்த கரங்களை நோக்குவீரானால், யாருக்கு அது இருக்கும்? ஆனால் செய்ய வேண்டும் என்று நீர் எனக்கு சொன்ன அந்த விசுவாசத்தின் கிரியையில் வருகிறேன். கூர்ந்த அறிவுடையவனாக இருப்பதற்காகவோ, உயர்த்திக் கொள்வதற்காகவோ அல்ல, அவர்கள் அதை செய்வார்கள் என்று நீர் கூறி இருக்கின்றபடியால் நான் வருகிறேன். நான் உம்முடைய வார்த்தையை விசுவாசிக்கிறேன். இப்போதும் விக்கிரகங்களையும் மற்ற அனைத்தையும் ஆராதித்து கொண்டிருக்கிற ஆயிரக்கணக்கானவர்கள் மிகுந்த உணர்வோடு இங்கே நின்று கொண்டிருக்கையில், மரித்தோரிலிருந்து இயேசு கிறிஸ்துவை உயிரோடு எழுப்பின நீரே, மெய்யான ஜீவனுள்ள தேவன் என்பதை இந்த மனிதனுக்கு அவனுடைய பார்வையைக் கொடுப்பதன் மூலம் இன்றிரவு அறிந்து கொள்ளச் செய்யும்" என்றேன். 166. அந்த மனிதனுடைய கன்னத்தில் கண்ணீர் வழிந்தோடியது. "நான் பார்க்கிறேன்" என்று அவன் கூறி பார்வை பெற்றவனாக எவ்வளவு வேகமாக அவனால் போக முடியுமோ அவ்வளவு வேகமாக அக்கட்டிடத்தின் வழியாக கீழே சென்றான். ஓ, என்னே ! ஆச்சர்யமான கிருபை! எவ்வளவு இனிமை அதன் சத்தம் என்னைப்போல பரிதபிக்கப்பட்ட ஒருவனை இரட்சித்தது ஒருவிசை காணாமல் போனேன் (வெளியில் தூரத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் குதிரைப் பந்தயம் இன்னும் மற்றவைகளிலும்) ஒருவிசை காணாமல் போனேன், ஆனால் இப்போது காணப்பட்டேன் காண குருடனாய் இருந்தேன், ஆனால் இப்போது நான் காண்கிறேன். 167. பாருங்கள், சகோதரனே, பழமை நாகரீக பரிசுத்தாவியின் மதம் அது நன்றாய் இருக்கிறது. பயப்படும்படி என் இருதயத்திற்கு கற்றுத்தந்தது அந்த கிருபையே என் பயங்களை விலக்கியது அந்த கிருபையே கிருபை வெளியாகி விலைமதிக்க முடியாததை செய்தது நான் விசுவாசித்த அந்த மணி நேரமுதல். (ஆம், ஐயா! ஓ, என்னே!) பதினாயிரம் ஆண்டுகள் நாம் அங்கிருக்கும்போது சூரியனைப் போல பிரகாசமான ஒளிவீசும் நீடூளியாய் நாம் அவர் துதியைப்பாட ஆதியில் நாம் ஆரம்பித்ததை விட. (ஓ, என்னே !) அனேக ஆபத்துகளின் வழியாய் கஷ்டங்களும் கண்ணிகளும் நான் முன்னே வந்து விட்டேன்; என்னை கொண்டு வந்து கற்றுத்தந்து இந்நாள்வரை காத்தது கிருபையே, என்னை சுமந்து சென்று கொண்டிருப்பது கிருபையே. (ஓ, என்னே!) 168. ஓ, என்னே! நான் எவ்விதம் அவரை நேசிக்கிறேன்! என்னால் ஒன்றும் செய்யக் கூடாது. என்னால் ஒன்றும் செய்யக்கூடாது. அது அவருடைய கிருபையாய் இருக்கிறது. உங்களால் ஒன்றும் செய்யக் கூடாது. ஆனால், நாம் இன்றிரவு, கிறிஸ்தவ மனிதர்களாக மனுஷிகளாக நாம் தகுதியற்றவர்கள் என்று அறிக்கை செய்து அவரை நாம் ஏற்றுக் கொள்ளும்போது.... நமக்குப் பதிலாக, அந்த ஒருவரை ஏற்றுக்கொண்டு... தேவன் அவரை ஏற்றுக்கொண்டு அவரை உயிரோடு எழுப்பியது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக அவர் கிறிஸ்துவை உயிரோடு எழுப்பிய அதே வேளையில் என்னையும் அவர் பாவனை வடிவில்(figurary form) எழுப்பினார். ஆமென். ஓ, நான் முடித்தாக வேண்டும். ஆனால் பாருங்கள். அவர் கிறிஸ்துவை உயிரோடு எழுப்பிய அதேவேளையில் என்னையும் அவர் பாவனை வடிவில் எழுப்பினார். நம்முடைய நீதிக்காக கிறிஸ்துவை உயிரோடு எழுப்பின அதே வேளையில் அவர் உன்னையும் எழுப்பினார். 169. பாருங்கள், நீங்கள் இரட்சிக்கப்பட்டிருப்பீர்களானால் நீங்கள் அதை விளங்கிக் கொள்வீர்கள். "எவர்களை முன்குறித்து அல்லது அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார். எவர்களை நீதிமான்களாக்-கினாரோ அவர்களை முன்னமே கிறிஸ்துவுக்குள் மகிமைப்படுத்தியும் இருக்கிறார்." அது சரியா? உலகம் உண்டாவதற்கு பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வார்த்தை, தேவனோடு இருந்த போது தேவனுடைய பார்வையில் கிறிஸ்துவுக்குள் ஏற்கனவே அவர் மகிமைப்படுத்தியிருந்தார். அது தேவனுடைய சிந்தையாயிருந்து பின்பு அந்த வார்த்தை அதோ அங்கே மாமிசமானது. அவர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட அதே நேரத்தில் கிறிஸ்துவுக்குள் என்னையும் ஏற்றுக் கொண்டார். அதோ அங்கே வரப் போகிறதான உலகத்தில் நீயும் நானும் எல்லா காலங்களிலும் இருந்த கிறிஸ்தவர்களும் அவரை நேசித்து அவருடன் வாழ்ந்து முடிவே இல்லாத நித்தியத்தில் ஸ்தோத்தரிக்கப்பட்ட மீட்பராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு இருப்போம். ஓ, என்னே! 170. சகோ. ராபர்ஸன், அது தான் என்னை வித்தியாசமானவனாக உணர வைக்கிறது. பாருங்கள். இவ்விதமாக தேவனுடைய வார்த்தையை வாசித்து, உங்களைத்தேடி கண்டு பிடிப்பது பாருங்கள், உங்களைத் தேடிக் கண்டுபிடிப்பது பழைமை நாகரீகம் அல்லவா? 171. பழக்கூழ் ஜாடிகளை (fruit-jar) ஆயத்தப்படுத்தும் காலங்களில், அம்மா வழக்கமாக செய்வதைப் போல, உங்களுக்குத் தெரியும், பழக்கூழ் இன்னும் மற்றவைகளை பழ ஜாடிகளில் முழுவதுமாக நிரப்புவாள். அவர்கள் அங்கே என்னை வெளியில் அனுப்பி அவைகளை தேய்க்க சொல்வார்கள். ஒரு பழைய கந்தையை வைத்து என்னால் எந்த அளவுக்கு அவைகளை தேய்க்க முடியுமோ அந்த அளவுக்கு தேய்ப்பேன். பின்பு அவர்கள் அதை எடுத்து நுண்ணுயிரிகளை அழித்து அவைகளை கொதிக்கும் நீரில் போட்டு சுத்தம் செய்வார்கள். அந்த ஜாடிகளை எந்த அளவுக்கு கொதிக்க வைக்க முடியுமோ அந்த அளவுக்கு கொதிக்க வைப்பார்கள். அவர்கள் ஏன் அவ்விதம் கொதிக்க வைக்கிறார்கள் என்று நான் ஒரு போதும் பார்த்ததேயில்லை. ஆனால் அவர்கள் அதிலுள்ள கிருமிகள் அனைத்தையும் அதிலிருந்து எடுக்க வேண்டும். ஏனென்றால் அதில் கிருமிகள் இருக்குமானால் அந்த பழக்கூழை அல்லது ஊறுகாய்களையும் வற்றல்களையும் புளிக்க செய்துவிடும். 172. ஆகையால் நாம் கிறிஸ்துவினிடம் வரும்போது அதைத்தான் நாம் செய்ய வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நம்மை கொதிக்க வைத்து, கிருமி நீக்கம் செய்து அனைத்தையும் அகற்றும் வரை தாழ்த்த வேண்டும். எந்தவிதமான புளிக்கச் செய்யக் கூடியவைகளையும் நீக்கி, பின்பு, தேவன் நமக்குள் பரிசுத்த ஆவியை வைத்து, நீங்கள் பாருங்கள், அவர் இவ்விதம் அங்கே வைத்து உங்களை என்றென்றுமாய் இனிமையானவர்களாக வைக்கிறார். 173. அம்மா பழக்கூழ், ஊறுகாய், வற்றல் (preserves) போன்றவைகளை ஆயத்தப் படுத்துவது வழக்கம். நீங்கள் எப்போதாகிலும் பழமையான பெரிய, நீரை கொதிக்க வைக்க பயன்படுத்தும் பாத்திரத்தை (kettle) பார்த்திருக்கிறீர்களா? அதை வெளியில் செங்கற்களின் மேல் வைத்து, உங்களுக்குத் தெரியும், அடியில் இவ்விதமாக விறகை வைத்து ஊ, நான் அவ்வாறு செய்திருக்கிறேன். பழக்கூழ் (jam) போன்றவைகள் தயார் செய்யும் காலங்களில் ஒரு புசல் (ஒரு புசல் bushel என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கணக்கின்படி 45.03 லிட்டர் ஆகும். ஏறக்குறைய 41.03 கி.கி - தமிழாக்கியோன்) சிறிய முற்றிய மஞ்சள் நிற பூக்களைக் கொண்ட தக்காளிகளையும் சர்க்கரையையும் அதற்குள் போடுவார்கள். ஊ! அவள் என்னை விறகு வெட்ட செய்வாள், உங்களுக்குத் தெரியும். நான் சென்று விறகை வெட்டி அதற்கடியில் வைப்பேன், உங்களுக்குத் தெரியும், அது கொதிக்க ஆரம்பித்து ஆவி வெளி வரும். "அம்மா எல்லாம் முடித்து விடவில்லையா?" என்பேன். "இல்லை, சென்று இன்னொரு செங்குத்தான மரத்தை வெட்டு" என்பார்கள். 174. உங்களுக்குத் தெரியும், எனக்கு வியர்த்து கொட்டும். நான் வந்து அவைகளை அங்கே அடியில் வைப்பேன். "அம்மா, அது போதும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் தானே?" "நீ இன்னும் ஒன்றை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்." 175. உங்களுக்குத் தெரியும், பாப் என்றும் "பாவ் பாவ்" என்றும் இவ்விதமாக கொதித்து அதனடியில் பிராணவாயு (oxygen) அல்லது ஏதோவொன்று வரும் வரையிலும் அவர்கள் அவைகளை கொதிக்கச் செய்வார்கள். அவைகள் அவ்வாறு வரும் போது அவைகளை டப்பாவில் (can) அடைப்பதற்கு ஆயத்தமாக உள்ளது என்று கூறுவார்கள். இனி மேலும் நிற்க முடியாமல் அவைகள் அதிகமாக கொதித்து வெளியில் விழும். பாருங்கள்? 176. ஆகையால், தேவனும் நமக்குள் இருக்கும் சகல பிசாசையும் அகற்றி நாம் மகிமையில் குதிக்கும் வரை உங்களுக்கு தெரியும், நம்மை இவ்விதமாக சேர்த்துக் கொள்கிறார் என்று நான் நினைக்கிறேன். பின்பு டப்பாக்களில் அடைக்க நீங்கள் ஆயத்தமாக இருக்கிறீர்கள். பின்பு தேவன் உங்களை முத்தரிக்கிறார் என்று உங்களுக்குத் தெரியும். ஆகையால் சகல பகைமை-களும் கிறிஸ்து விரும்பாத சகலத்தையும் கொதிக்க வைத்து அகற்றும் வரை ஒரு நல்ல பழைமை நாகரீக கூட்டம் தான் இங்கு நமக்கு தேவையாய் இருக்கிறது. பார்த்தீர்களா? "கர்த்தாவே, நான் வருந்துகிறேன். சகோதரனே, என்னை மன்னியும். வேண்டுமென்று நான் அவ்வாறு செய்யவில்லை. இனி அப்படி செய்ய மாட்டேன். ஓ, தேவனே, என் மீது இரக்கமாயிரும்!" என்று நீங்கள் கூறும் வரை கொதிக்க வைக்கப்பட வேண்டும். நீங்கள் பாருங்கள், பின்பு நீங்கள் டப்பாவில் அடைக்க ஆயத்தமாக இருக்கிறீர்கள். மெய்யாகவே உங்களை பயன்படுத்த தேவன் ஆயத்தமாகுகிறார். முன்பு நீங்கள் எடுத்த அந்த காரியங்கள், நீங்கள் திருடியது, உங்களுக்குத் தெரியும், நீங்கள் அதை சரி செய்து, "சகோதரனே, வேண்டுமென்று நான் திருடவில்லை என்று உங்களுக்குத் தெரியும். இல்லை ஐயா, நான்-நான் ஆயத்தமாக உள்ளேன்.... நான்-நான் அதற்காக இருமடங்கு செலுத்துகிறேன்." பார்த்தீர்களா? உங்களுக்குத் தெரியும். பிறகு நீங்கள் எல்லாம் சரியாகி விடுகிறீர்கள். அது சரி. அது தான் நமக்கு தேவை. ஓ, என்னே ! 177. நான் பாடவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், பழைமை நாகரீக மதம் என்ற பாடலை உங்களுக்காக நான் பாடப் போகிறேன். (சபையோர், "ஆமென்" என்று கூறுகின்றனர் - ஆசிரியர்) அந்த அடியை பாடுங்கள். நான் அந்த அடியை பாடுகிறேன். பிறகு அந்த சரணத்தை நீங்கள் பாடுங்கள். அந்த பழங்கால பரிசுத்த ஆவி அதன் அருகில் பிசாசு செல்லாது அதனால் ஜனங்கள் அதற்கு பயப்படுகின்றனர் ஆனால் எனக்கு போதுமான நல்லது பழங்கால மதத்தை எனக்குத் தாரும் பழங்கால மதத்தை எனக்குத் தாரும் பழங்கால மதத்தை எனக்குத் தாரும் அது எனக்கு போதுமானது நான் சாகும் போது அது செய்யும் அது பொய்யுரையை நிறுத்தும் அது பிசாசை பறந்தோட வைக்கும் அது எனக்கு போதுமானது அந்த பழங்கால மதத்தை எனக்குத் தாரும் அந்த பழங்கால மதத்தை எனக்குத் தாரும் அந்த பழங்கால மதத்தை எனக்குத் தாரும் அது எனக்கு போதுமானது (பாருங்கள்?) அது மிகவும் நல்லது வேறெதுவும் வேண்டாம் எனக்கு அது என் சகோதரனை நேசிக்க வைக்கும் காரியங்களை திரை நீக்கி வெளிக் கொணரும் அது எனக்கு போதுமானது பழங்கால மதத்தை எனக்குத் தாரும் பழங்கால மதத்தை எனக்குத் தாரும் பழங்கால மதத்தை எனக்குத் தாரும் அது எனக்கு போதுமானது 178. இப்பொழுது இங்கு எத்தனைபேர் பழமை நாகரீக மதத்தை பெற்று இருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்தி கூறுங்கள். பழங்கால மதம் எனக்கு கிடைத்து விட்டது அந்த பழங்கால மதம் எனக்கு கிடைத்து விட்டது அந்த பழங்கால மதம் எனக்கு கிடைத்து விட்டது அது எனக்கு போதுமானது. 179. இப்பொழுதும், அன்பின் தகப்பனே, சில நேரங்களில் நாங்கள்... நாங்கள் மகிழ்ச்சியடைந்து நாங்கள் இவ்விதமாக, மெய்யாகவே ஒரு கூட்ட பிள்ளைகளைப் போல நடந்து கொள்ளுகிறோம். அது ஏனென்றால் நாங்கள் விடுதலை அடைந்திருக்கிறோம். நாங்கள் பொல்லாத கட்டுகளின் கீழோ, அல்லது எந்த விதமான குறிப்பிட்ட முன்னோர்களுடைய காரியங்களிலோ இல்லை. நாங்கள் பரிசுத்த ஆவியின் விடுதலையோடு இருந்து, நாங்கள் உம்மை பாடி துதித்து ஆராதிக்கிறோம். வார்த்தையை சுற்றிலும் ஐக்கியம் கொண்டு, எங்களுக்குள் களி கூறுகின்றோம். அதற்காக நாங்கள் உம்மை துதிக்கிறோம், சர்வவல்ல தேவனே! ஓ, இந்த பாரம்பரிய மதங்களின் எல்லாவித பெரும் குழப்பத்தையும் எல்லாவித விக்கிரக ஆராதனைகளையும் பார்த்த பிறகு சிந்திக்கும் போது, நீர் எனக்கு மிகவும் நல்லவராயிருக்கிறீர். உம்முடைய உயிர்த்தெழுந்த வல்லமையில் நான் உம்மை அறிந்து அதைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்வதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறோம். 180. இன்றிரவு பிதாவே, இச்சிறிய சபையை ஆசீர்வதியும். இங்குள்ள ஒவ்வொ-ருவரையும் ஆசீர்வதியும். பிதாவே, எங்கள் வாசல்களில் அன்னியர்கள் இருப்பார்களானால், அவர்களை ஆசீர்வதியும், ஒவ்வொருவரையும். எங்களை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாகவையும். தேவ வல்லமையை எங்கள் மீது வைப்பீராக. பொல்லாங்கான சிந்தைகளிலிருந்து எங்கள் ஆத்துமாக்களை பரிசுத்தப்படுத்தும். எங்கள் வழியில் பொல்லாப்பு வருமானால், கர்த்தாவே, உடனடியாக எங்கள் தலைகளை திருப்பி மற்ற வழியில் நடக்கச் செய்யும். 181. இப்போதும் பிதாவே, இன்றிரவு நீர் எங்களை ஒன்றாக ஆசீர்வதியும். மகத்தான நேரத்தை எங்களுக்குத் தாரும். இப்போதும் நாங்கள் வியாதிய- ஸ்தரையும் அவதிப்படுபவரையும் அழைக்கும் போது அவர்கள் ஒவ்வொ-ருவரையும் சுகமாக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். மகிமை.... கூறப்பட்டவைகளிலிருந்தும் செய்யப்பட்டவைகளிலிருந்தும் மகிமையை எடுத்துக் கொள்ளும். நாங்கள் இவைகளை கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். 182. எங்கள் தலைகள் வணங்கியிருக்கும் இவ்வேளையில், "சகோ. பில், இப்போதும் என்னுடைய சொந்த ஆத்துமாவில், தேவன் ஏற்றுக்கொண்ட வழியிலும், அருளப்பட்ட வழியிலும் நான் வர விரும்புகிறேன்" என்று இங்கே நீங்கள் யாராகிலும் சொல்வீர்களானால், "யாரும் பார்க்காத போது நான் என் கரத்தை உயர்த்தி, 'சகோ.பில், தேவன் தமது கிருபையை தந்து, என்னை ஒரு சிறந்த கிறிஸ்தவனாக உருவாக்கும் என்றும் எனக்காக ஜெபம் செய்யுங்கள்' என்றும் சொல்லப் போகிறேன்" எனக் கூறுவீர்களா-? என நான் உங்களை கேட்க விரும்புகிறேன். நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா-? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களை, உங்களை, உங்களை, உங்களை. அது நல்லது. எல்லாம் சரி. 183. பிதாவே, நீர் அவர்கள் கரங்களைப் பாரும். இந்த ஆசீர்வாதங்களை நீர் தரும்படி நான் ஜெபிக்கிறேன். உமது அன்பும் கிருபையும் அவர்கள் அனைவர் மேலும் இருப்பதாக. அவர்கள் பாவம் செய்தோ அல்லது ஏதாகிலும் செய்திருப்பார்களானால் அவர்களை மன்னிக்கும்படி நான் ஜெபிக்கிறேன், பிதாவே. இன்றிரவு எங்கள் மத்தியில் கர்த்தாவே, புருஷனோ அல்லது ஸ்திரீயோ பையனோ அல்லது பெண்ணோ இவ்விதமாக மிகச்சரியாக இரட்சிக்கப்படாமலும் இரத்தத்தின் கீழ் இல்லாமலும் இந்த கட்டிடத்தில் எங்காகிலும் இருப்பார்களானால் பிதாவே, இப்பொழுதே அவர்கள் விசுவாசிகள் ஆகும்படி நீர் செய்வீராக. 184. "நீங்கள் விசுவாசிக்கக்கூடுமானால்...." என்று சொல்லியிருக்கிறீர். நாங்கள் எதை விசுவாசிக்கிறோம்? தேவன் தம்முடைய குமாரனை இவ்வுலகிற்கு அனுப்பி நமக்குப் பதிலாக பாவமாக்கினார். நாங்கள் நல்லவர்கள் அல்ல, எவ்விதத்திலும் நாங்கள் நல்லவர்கள் அல்ல என நாங்கள் அறிக்கை செய்து அவரை எங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்கிறோம் என்று விசுவாசிக்கிறோம். அதைத் தான் நாங்கள் விசுவாசிக்கிறோம், பிதாவே. அதில் நீர் எங்களுக்கு நித்திய ஜீவனைத்தாரும். ஓ, நாங்கள் மிகவும் மகிழச்சியடைகிறோம். உம்முடைய குமாரனை நாங்கள் விசுவாசிக்கிறபடியால் நீர் அதை எங்களுக்குத் தருவதாக நீர் கூறியிருக்கிறீர். நாம் அவரில் விசுவாசமாய் இருப்போமானால், நமக்கு நித்திய ஜீவன் உண்டு என்று இயேசு தாமே கூறினார். ஆகையால் நாம் இதற்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 185. இன்றிரவு எங்களை ஆசீர்வதித்து ஒவ்வொரு பாவத்தையும் மன்னியும். இன்றிரவு இக்கூட்டத்தில் இருந்த ஒரு நபராகிலும் திரும்பவும் தூரமாக சென்று விடாமல் நித்திய ஜீவனை உடையவர்களாக இருப்பார்களாக. ஏனென்றால் அவர்கள் இன்றிரவு இங்கு கூடி வந்து உம்மை விசுவாசித்து இருக்கின்றனர். பிதாவே, இப்போதும் நீர் அவர்களை கண்ணோக்கி அவர்கள் செய்வதையும் சொல்வதையும் அனைத்தையும் ஆசீர்வதியும். கடைசி நாட்களில் சமாதானத்தோடு அல்லது கிருபையோடு அவர்கள் உம்மிடம் வருவார்களாக. நாங்கள் அனைவரும் அங்கு கூடி வந்து இந்த இரவில் ஒன்றாக இருப்பதை நினைப்போமாக. இயேசுவின் நாமத்தின் மூலம் இதை அருள் செய்யும். ஆமென். 186. எனதருமை நண்பர்களே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது டெட்டி இங்கே பியானோவின் அருகில் வருவார். ஜெபித்துக் கொள்ள வேண்டியவர்கள், உடனே சீக்கரமாக பீடத்தைச் சுற்றி கூடுவார்களானால், நாம் சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது நீங்கள் வருவீர்கள் ஆனால் ஒன்பதரை மணிக்கு நாம் வெளியில் செல்ல முயற்சிப்போம். சிலர் எனக்கு அனுப்பிய கடிதத்தை இங்கு நான் படிக்க வேண்டும். அதை இங்கு இப்பொழுது வாசிப்பது எனக்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எனவே ஜெபிக்க வேண்டியவர்களுக்காக ஜெபிக்கும் வேளையில் மற்றவர்கள் உங்கள் இருக்கைகளில் அமர்ந்திருப்பீர்களாக. ஜெபித்துக் கொள்ளும்படியாக சகோதரி ரடல் இங்கிருப்பது எனக்குத் தெரியும். வேறு யாராகிலும் இருப்பீர்களானால், ஏன்...